பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

மாயா விநோதப் பரதேசி

நல்லொழுக்கங்கள் முதலியயாவும் தாமாகவே பெருகும். இந்த சூட்சுமங்களை எல்லாம் நம்முடைய தேசத்து முன்னோர் எத்தனையோ யுகங்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்து அதற்குத் தகுந்தபடி தர்ம சாஸ்திரங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஸ்திரீகள் தம்முடைய புருஷர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அருமையான சூட்சுமங்களை எல்லாம் நம்முடைய முன்னோர்கள் அனுபவ பூர்வமாய்க் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றின்படியே நாம் நடக்க வேண்டுமேயன்றி, மேல்நாட்டுப் போலி நாகரிகங்களை எல்லாம் தாட்சணியம் பாராமல் குப்பையில் தள்ள வேண்டும். இப்போது மேல்நாட்டு நாகரிகம் நம்முடைய தேசத்தின் சனாதன தர்மங்களை எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்தில் கபளிகரம் செய்துவிடுமோ என்று நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். இதற்கு முன் இருந்த நம்முடைய ரிஷிகளின் விதைகளும், மேதாவிகளின் விதைகளும், மற்ற மிருக பட்சி விருகூடிங்களின் விதைகளைப் போல சிரஞ்சீவியாகவே இருந்து கொண்டிருக்கின்றன. ஏதோ இரண்டொரு வருஷங்களில் ஒரு வயலில் விளையும் நெல், பூச்சி அரிப்பதனால் கெட்டுப் போகிறதில்லையா, அப்படி இருந்தாலும், உலகத்தில் உள்ள நெல் விதையின் இயற்கையான குணம் முழுதும் மாறியா போகிறது. இல்லை அல்லவா. அதுபோல நம்முடைய தேசத்து மனிதர்களுடைய பூர்வீக அறிவு முதிர்ச்சியும் பரிபக்குவ ஞானமும் மாறிப்போய் போலி மார்க்கங்களைப் பின்பற்றும் என்று நீங்கள் கனவிலும் நினைக்க வேண்டாம். தட்டானுடைய பட்டறையில் உருமாறிக் கெட்டுப்போய்ப் பலவிதமாகச் சிதறிப் போகும் தங்கத் துண்டுகள் எல்லாம் முடிவில் குகைக்குள் வைத்து உருக்கப்பட்டு எப்படி மணித்திரளாக மாறிப் பழைய பிரகாசத்தோடு புனர்ஜென்மம் எடுக்கிறதோ, அதுபோல காலமாகிய தட்டானுடைய பட்டறையில் சின்னாபின்னப்பட்டு சிதறிப்போகும் தர்மங்களும் கொள்கைகளும் மனிதருடைய அனுபோகமாகிய குகைக்குள் நுழைந்து நல்ல அறிவாகிய அக்னியால் உருக்கப்படுமானால், எவை உண்மையான வைகளோ, எவை நிரந்தரமானவைகளோ அவை பூரண