பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாயா விநோதப் பரதேசி


1-வது அதிகாரம்
வஸந்த ருதுவின் வைபவம்


திருவல்லிக்கேணிக் கடற்கரையில் மேரி மகாராணியார் பெயர் வழங்கும் பெண்கள் கலாசாலைக்கு எதிரில் விஸ்தாரமாகப் பரவியும் வெண்மணல் தரையில் இரண்டு யௌவனப் புருஷர்கள் அலையின் ஒரமாக இருந்து சம்பாவித்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவனுக்கு இருபது, அல்லது, இருபத்தொரு வயது இருக்கலாம். அவன் தெற்குத் திக்கில் கால்களை நீட்டிக் குப்புறப் படுத்து, தலைவரையில் மணலில் படியச்செய்து, இரண்டு முழங் கால்களையும் கீழே ஊன்றி, மார்பையும் முகத்தையும் உயர்த்தி கிழக்கு, வடக்கு, மேற்கு, ஆகிய மூன்று திக்குகளிலும் தனது பார்வையைச் செலுத்தத் தகுந்தபடி உல்லாசமாகச் சயனித்திருந்தான். மற்றவனது வயது சுமார் இருபத்தைந்துக்குக் குறையாது என்றே சொல்ல வேண்டும். அவன், கீழே சயனித்து இருந்தவனுக்கு எதிரில் சுமார் ஒன்றரை கஜ துரத்தில் தெற்கு முகமாக உட்கார்ந்திருந்தான்.

கீழே சயனித்திருந்த விடபுருஷனது வடிவம் அபரஞ்சித தங்கத்தை உருக்கி ஓடவிட்டது போல அழகான சென்னிறமும், இயற்கையான மினுமினுப்பும், யெளவன காலத்தில் புதுத் தன்மையும் வாய்ந்ததாய் இருந்தது. அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஒவ்வோர் அங்கத்திலும் மிருதுத் தன்மையும், செழுமையும், அழகும் சம்பூர்ணமாக நிறைந்து தோன்றின. அவன் பேசியபோது வாய் மழலை மாறாத குழந்தைகளின் வாய் அழகாகக் கோணுவது போலத் தோன்றிய-

மா.வி.ப.1-2