பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

மாயா விநோதப் பரதேசி

வேலிகளும் அழகாகவும் ஒழுங்காகவும் காணப்பட்டன. அத்தகைய சிங்கார வனத்தின் இடையில் இருந்தும், மேன்மாடம் உள்ளதுமான கட்டிடம் வெள்ளைக்கார துரைகள் வசிக்கும் மாளிகைபோல அமைக்கப்பட்டிருந்தது. பாட்டையின் ஒரத்தில் இருந்த இரும்புக் கம்பிக் கற்களால் வழுவழுப்பாகவும் மேடு பள்ளமென்பது இல்லாமல் சமமாகவும் ஒரு பெரிய பாதை காணப்பட்டது. அந்தப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் சமதூரத்தில் தென்னை மரங்களும், கமுகு மரங்களும் காய்க்குலைகளைத் தாங்கி நின்றன. அவற்றின் அடியில் ஒரே அளவாக வெட்டிவிடப்பட்ட மருதாணி வேலியும், அதற்கு முன்னால் பல நிறங்களைக் கொண்ட வரிசையான ரோஜாப் புஷ்பத்தொட்டிகளும் காணப்பட்டன. அந்தத் தொட்டிகளை அடுத்தாற் போல அருகம்புல் வளர்ந்த தரை, பாட்டையில் வந்து முடிந்த இடத்தில், பீங்கான்களால் ஆன சிறிய சிறிய ஒடுகள், மருதாணி வேலியான மீசைக்குப் பக்கத்தில் பல்வரிசை போலப் பாட்டை ஒரத்தில் பதிப்பிக்கப் பெற்றிருந்தன. அந்தப் பாட்டையின் வழியாக உள்ளே சென்றால், நடுவில் இருந்த கட்டிடத்தின் முன்னால் கள்ளிக்கோட்டை ஒடுகள் போர்த்தப் பெற்றதும் கொட்டகைப் பந்தல் போல இருந்ததுமான மண்டபத்தின் கீழே போய்ப் பாதை முடிவடைந்தது. அந்த மண்டபத்தின் நான்கு பெரிய துண்களைச் சுற்றிலும் அழகிய பூத்தொட்டிகள் அழகு செய்து கொண்டிருந்தன. அந்த மண்டபத்தில் இருந்து படிக்கட்டின் வழியாகக் கட்டிடத்திற்குள் நுழைந்தால், முன் பக்கத்தில் பூத்தொட்டிகள் நிறைந்த விசாலமான ஒரு தாழ்வாரம் காணப்படும். மேற்படித் தாழ்வாரத்தின் மேற்கூரையில் இருந்து சிறிய சிறிய பூத்தொட்டிகளிலும், மின்சார விசிறிகளும் மின்சார விளக்குக் குண்டுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தாழ்வாரத்தில் நான்கு டலாயத்துகள் வெள்ளி வில்லைகள், வெள்ளி ஜரிகை தைத்த டவாலிப் பட்டைகள் முதலியவற்றை அணிந்தவராய் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்தத் தாழ்வாரத்தை அடுத்தாற் போல உட்புறத்தில் ஒரு பெருத்த கூடம் இருந்தது. கலெக்டரைப் பார்ப்பதற்கு யாராவது நண்பர்களோ, அல்லது குமாஸ்தாக்களோ,