பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

191

கொண்டிருப்பதுதான் கடவுளுக்கு வேலை போல் இருக்கிறது. இப்படிக் கடவுள் செய்வதாக இருந்தால், அவர் நேரிலேயே வந்து அதைச் சொல்லிவிட்டுப் போவது சுலபமான வேலை அல்லவா? மற்ற எந்த தேசத்தாரும் சகுனம் என்பதையே பார்க்கிறதில்லையே. அங்கே பூனைகள் குறுக்கே போய்க் கொண்டுதான் இருக்கின்றன. மனிதர் ஒரு காரியம் செய்யத் தொடங்குகையில், மற்றவர் தும்முவதும் உண்டு. ஆனால் கடவுள் அந்தத் தேசங்களில் அப்போது அங்கே இருந்து சைகை காட்டுகிறதில்லை போலிருக்கிறது. நம்முடைய தேசத்தில்தான் கடவுள் வேண்டும் என்று இந்த வேலையைச் செய்து வருகிறார் போல் இருக்கிறது. இந்தப் பைத்தியக்கார நினைவெல்லாம் நம்முடைய தேசத்தை விட்டு எப்போது போகிறதோ அப்போதுதான் இந்தத் தேசம் கூேடிமமடையும். ஜனங்களும் உண்மையான அறிவாளிகள் என்று அன்னிய தேசத்தாரால் கருதப்படுவார்கள். அது போகட்டும். நீ சொல்லுகிறபடி டெலிபோன் மூலமாக அப்பாவோடு பேசி வேண்டுமானால், சங்கதியை அவர்களிடம் சொல்லிப் பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம் படத்தை மேஜையின் மீது வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த டெலிபோனண்டை போய், தனது தந்தையிருந்த கலெக்டர் கச்சேரியின் டெலிபோனுடன் அதைச் சேர்க்கச் செய்து, அவருடன் பேசத்தொடங்கி, விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்து, தான் செய்ய உத்தேசித்த காரியத்தையும் கூறினாள்.

அவள் தெரிவித்த வரலாறுகளைக் கேட்ட பட்டாபிராம பிள்ளையினது மனதில் ஒருவித வியப்பும் சந்தேகமும் உண்டாயின. அவர் மன்னார்குடியில் அடிஷனல் மாஜிஸ்டிரேட்டாக இருந்த காலத்தில் வேலாயுதம் பிள்ளையினது குடும்ப வரலாறுகளை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். அதன் பிறகு, இரண்டொரு வருஷ காலமாகத் தமது புதல்வியைக் கந்தசாமிக்கு மணம்புரிவிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்த காலத்தில், அவர் தமது புதிய சம்பந்தியின் குடும்ப வரலாறுகளையும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் யார் யார் எந்தெந்த ஊரில் இருக்கின்றனர் என்ற விஷயங்களையும்