பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மாயா விநோதப் பரதேசி

நன்றாக அறிந்திருந்தார். அதுவுமன்றி, தமக்கு மாப்பிள்ளையாக வரப்போகும் கந்தசாமி கோமளேசுவரன் பேட்டையில் தனியான ஜாகை வைத்துக் கொண்டு வேலைக்காரியின் மூலமாகத் தனது போஜனத்தைச் செய்து கொண்டு படித்துவருகிறான் என்ற விவரமும் அவருக்கு நன்றாகத் தெரியும். வேலாயுதம் பிள்ளையின் சம்சாரத்துக்குத் தங்கை ஒருத்தி இருப்பதாகவே எவரும் அவரிடம் தெரிவித்ததில்லை. ஆதலால், மனோன்மணி தெரிவித்த செய்தி நிரம்பவும் புதுமையாக இருந்ததன்றி, அப்படிப்பட்ட சிறிய தாய் ஒருத்தி கோமளேசுவரன் பேட்டையில் இருந்தால், கந்தசாமி அவளிடம் இராமல் தனியாக இருக்க மாட்டான் என்ற ஒர் ஐயமும் தோன்றியது. ஆனாலும், அதற்குப் பலவித சமாதானங்களும் புலப்பட்டன. அவள் தனது சிறிய தாயாக இருந்தாலும், தான் அவளுடைய வீட்டில் நெடுங்காலம் போஜனம் செய்து வருவது இரு திறத்தாருக்கும் அசெளகரியம் என்று நினைத்துக் கந்தசாமி தனியாக இருந்து வருகிறானோ என்ற எண்ணமும் தோன்றியது. ஆகவே, பட்டாபிராம பிள்ளை தமது புதல்விக்கு அடியில் வருமாறு மறுமொழி கூறினார். “வந்திருப்பவர்கள் தக்க கண்ணியமான மனிதர்கள்; அவர்களுடைய சம்பந்தத்தை நாம் அடையப் போகிறோம். நீ அவர்களுடைய வீட்டில் போய் வாழ்க்கை நடத்தப் போகிறாய். அவர்களை நாம் தக்க மரியாதை செய்து வரவேற்று உபசரித்து அனுப்புவதே நியாயமன்றி, நமக்கு அதனால் அசெளகரியம் ஏற்படுகிறதென்று நினைத்து அவர்களைப் பார்க்காமல் அனுப்புவது முற்றிலும் தவறான விஷயம். இப்படி நாம் நடந்து கொண்டால், நாம் மரியாதை தெரியாத சுத்த அநாகரிகர்கள் என்ற பெயரெடுக்க நேரும். இந்தப் பரீட்சை தவறிப் போவதனாலும் பாதகமில்லை. அல்லது; இன்று, நாளை இரவுகளில் இரண்டொரு மணி நேரம் அதிகமாகப் படித்தால், இப்போது செலவாகும் காலத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், நீ வேலைக்காரியின் மூலமாய் அவர்களை வரவேற்று அவர்களோடு வந்திருக்கும் உன் சிறிய மாமியாரை உபசரித்து வைத்து சம்பாவித்துக் கொண்டிரு. என்னுடைய கச்சேரி இன்று சனிக்கிழமை ஆகையால், 4