பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

209

மாத்திரம் மரியாதை என்பது கிடையாதா? தகப்பனாரிடத்தில் பிள்ளையும் புருஷனிடம் பெண்ஜாதியும் மரியாதைக் குறைவாகவா நடந்து கொள்ளுவார்கள். அப்படி ஒரு நாளும் அவர்கள் நடந்து கொள்ளுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஒருவரிடத்து ஒருவர் அன்பும் மரியாதையும் வைத்தாலும், அதை இந்த அற்ப விஷயங்களில் எல்லாம் காட்டுகிறதில்லை. சாப்பாடு தேகசெளகரியம் முதலிய விஷயங்களில் எல்லோரும் சமம் என்பது அவர்களது கொள்கை. நம்முடைய தேசத்தில், ஆண் பிள்ளைகள் தான் மேலான ஆசனத்தில் உட்கார வேண்டும், பெண் பிள்ளைகள் காற்றில்லாத இருண்ட மூலை முடுக்குகளிலும், அழுக்கடைந்த தரையிலும் உட்கார வேண்டும், மழை பெய்தாலும், வெயில் காய்ந்தாலும் நம்முடைய ஸ்திரீகள் குடை பிடித்துக் கொள்ளக் கூடாது, காலில் பாதரட்சை போட்டுக் கொள்ளக் கூடாது. வெயிலில் வெறுங்காலோடு நடப்பதால், அவர்களுடைய கால் வெதும்பிக் கொப்புளித்துப் போனாலும் பாதகமில்லை. அவர்கள் ஆண்பிள்ளைகளுக்குச் சமமாகப் பாதரட்சை அணியக் கூடாது! யாராவது ஒரு பெண்பிள்ளை செருப்பு குடை முதலியவற்றை உபயோகித்துக் கொண்டு போனால், நம்முடைய ஜனங்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள்? வெள்ளைக்காரரில் குடை பிடிக்காத அல்லது செருப்புப் போடாத ஸ்திரீயுண்டா? ஸ்திரீகளுடைய காலிலும் தலையிலும் வெயிலின் வெப்பம் உறைக்காதா? அவர்கள் அந்தச் சூட்டைப் பொறுத்துக் கொண்டால் தான் அவர்கள் புருஷர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற அந்தஸ்து நிலைக்குமா? இல்லாவிட்டால் நிலைக்காதா? இப்படி எல்லாம் நம்முடைய தேசத்துப் புருஷர்கள் சுயநலம் கருதி ஸ்திரீகளை அடக்கி அடிமைகளைப் போல நிரம்பவும் கொடூரமாக நடத்துவதெல்லாம் எப்போது ஓழியுமோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் நாம் நம்முடைய ஸ்திரீகளின் மேல் குறை கூறுவதற்கு இடமில்லை. ஏனென்றால், அவர்கள் யுகம் யுகமாகச் செயலற்றுப் புருஷருடைய கொடுங்கோன்மையில் ஆழ்ந்து அடங்கிக் கிடந்து உழலுகிறார்கள். நரகத்திலேயே ஆயிசுகாலம் முடிய இருந்து இருந்து பழகுவோருக்கு அதுவே மா.வி.ப.I-15