பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

213

தான் கண்டித்தாலும், அதற்கு நற்புத்தி புகட்டினாலும், அதை அந்தக் குழந்தை கவனிக்கிறதில்லை. புதிய சுவையாகத் தோன்றும் மண்ணின் சுவைதான் அதற்குப் பரம இன்பமாகத் தோன்றுகிறது. அது நிரம்பவும் ஆவலோடு மண்ணையும் சாம்பலையும் எடுத்துத் தின்று சந்தோஷப்படுகிறது. அதற்கு ஒவ்வொரு வேளையும் ஆகாரம் ஊட்டுவது பெரும் பாடாய்ப் போய் விடுகிறது. ஆனால் அதற்குக் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி அடைந்துவிடுமானால், அதன் பிறகு உண்மை விளங்கி விடுகிறது. தாயார் கொடுத்த ஆகாரமே உடம்புக்கு உகந்தது என்றும், மண் முதலிய இதர வஸ்துக்களை உண்பதால் கெடுதல்கள் உண்டாகும் என்றும் அது தானாகவே உணர்ந்து கொள்ளுகிறது. கைக்குழந்தைகளை விட்டு, வயதான பையன்களை நாம் எடுத்துக் கொள்வோம். பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிக் கல்வி கற்று வருமாறு ஏவுகிறார்கள். கல்வி கற்பது அவர்களுக்கு விஷத்தை விழுங்குவது போல இருக்கிறது. துஷ்டப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடித் தம்முடைய பொழுதை எல்லாம் வீணாக்குவதே அவர்களுக்கு அத்யந்த சுகமாகத் தோன்றுகிறது. தம்முடைய பெற்றோர் தம்மை வருத்தி வதைக்கிறார்களே என்ற நினைவும், அவர்களைக் கொன்று விடலாமா என்ற எண்ணமும் அப்படிப்பட்ட பையன்களுடைய மனசில் தோன்றுகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேக ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்கு அடிக்கடி விளக்கெண்ணெய் முதலிய விரோசன மருந்துகளைக் கொடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். அது அவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. எப்போதும் தின்பண்டங்களைத் தின்று உடம்பை மேன்மேலும் கெடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேகத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு அடிக்கடி எண்ணெய் ஸ்நானம், சாதாரண நீராட்டம் முதலியவற்றைச் செய்விப்பதோடு, சுத்தமான உடைகளை அணிவிக்க விரும்புகிறார்கள். பையன்கள் அவைகளை எல்லாம் பெருத்த உபத்திரவமாக மதித்துத் தம்முடைய போஜனம், ஸ்நானம், உடை முதலிய யாவற்றையும் அசட்டை செய்து விளையாட்டி