பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

215

ஏற்பட்டிருக்கிறது. அந்தந்தச் சமயத்தில் அதது நிலைத்ததாகவும் உண்மை போலவும் தோன்றுகிறது. காலக்கிரமத்தில் அது பொய்யாகி விடுகிறது. ‘அடாடா! நாம் அப்படி மூடத்தனமாக நடந்து கொண்டோமே என்று அவர்களே பழைய சங்கதிகளை நினைத்து விசனப்படுகிறார்கள். இந்த உலகத்தில் கோடாது கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லா உடம்பிலும் ஒரே விதமான அவயவங்களே இருக்கின்றன. ஆனாலும் ஒருவனுடைய முகம் போல இன்னொருவனுடைய முகம் இல்லை. ஒருவனுடைய உடம்பின் அமைப்பைப் போல இன்னொருவனின் உடம்பின் அமைப்பு இல்லை. இரண்டு முகங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கின்றனவோ, அது போல இரண்டு மனங்கள் ஒன்று போல இருப்பதில்லை. ஒரு மனிதனுடைய மனம் போல இன்னொரு மனிதனுடைய மனம் இருக்கிறதே அரிது. எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி முகவேறுபாடும், மனவேறுபாடும் இருக்கின்றன. மனசு கண்ணாடி போன்றது. சுத்தமாக அமைந்த கண்ணாடி எந்த வஸ்துவையும் உள்ளப்படி காட்டுகின்றன. சில பெரிதாக்கிக் காட்டுகின்றன. அதுபோல சில மனிதர்கள் மதங்கள், உலக அனுபவங்கள், உலக சுகங்கள், உலகப் புதுமைகள் முதலியவற்றைக் கண்டு மயங்காமல், அவற்றில் உண்மை எவ்வளவு இருக்கிறது என்றும், பொய் எவ்வளவு இருக்கிறது என்றும் சீர்தூக்கிப் பார்த்து வெகு சீக்கிரத்தில் சரியான முடிவுக்கு வந்து விடுகிறார்கள். சிலர் புதிய விஷயங்களின் அனுகூல பிரதிகூலங்களை அறிய மாட்டாமல் மயங்கி க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தமாய் உழன்று அவஸ்தைப்படுகிறார்கள். பனம்பழத்தைப் புதிதாகத் தின்பவன் இது ருசியாய் இருக்கிறதே. இதை மனிதர் தின்னாமல் அலட்சியமாக விட்டிருக்கிறார்களே; மனிதர்கள் மூடர்கள் என்று எண்ணிக் கொண்டு, மேன்மேலும் பனம்பழத்தைத் தின்கிறான். மறுநாள் அதன் பித்தம் அவனுடைய உடம்பை வதைக்க ஆரம்பிக்கும் போது அவன் அதன் உண்மைக் குணத்தைத் தெரிந்து கொள்வான். கெட்டுப்போன தன்னுடைய உடம்பை அவன் நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதற்குள் பனம் பழத்தைப் பற்றியும் ஜனங்களைப் பற்றியும் அவன் கொண்ட அபிப்பிராயம்