பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

மாயா விநோதப் பரதேசி

முற்றிலும் மாறிப் போவது நிச்சயம். இந்த இங்கிலீஷ் நாகரிகமும் பழக்கவழக்கங்களும் பனம் பழம் தின்பது போல முடியுமோ என்னவோ. அது காலக்கிரமத்தில் தான் தெரியும். இப்போது சில வருஷங்களாகத் தானே இந்தப் புதிய கல்வியும் நாகரிகமும் நம்முடைய தேசத்தில் கையாளப்படுகின்றன. வெகு சீக்கிரத்தில் உண்மை தெரிந்துவிடும். அது எப்படியாவது போகட்டும்; அதைப்பற்றி நாம் ஏன் வாக்குவாதம் செய்ய வேண்டும். அற்ப விஷயமாகிய நாற்காலியைப் பற்றிய பிரஸ்தாபம் இவ்வளவு தூரம் பேச்சை வளர்த்து விட்டது. நீங்கள் ஏதோ ஒரு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பதாகக் கீழே இருந்த வேலைக்காரர்கள் சொன்னார்கள். ஆகையால் எங்களோடு அதிகமாய்ப் பேசிக் கொண்டிருக்க உங்களுக்கு அவகாசம் இராது. நிரம்பவும் அரிதான உங்களுடைய பொழுதை நாங்கள் அபகரித்துக் கொள்வது அக்கிரமமான காரியம். ஆகையால் நாற்காலியைப் பற்றிய பிரஸ்தாபத்தையும், புதுநாகரிகத்தைப் பற்றிய பிரஸ்தாபத்தையும் நாம் இவ்வளவோடு விட்டு விடுவோம். நான் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டது ஒன்றே போதுமானது. என்னை நீங்கள் பெருத்த சிம்மாசனத்தில் வைத்து உபசரிப்பது போல எண்ணிக் கொள்ளுகிறேன்” என்று நயமாகவும் சிரித்த முகத்தோடும் கூறிவிட்டு, அந்த விடுதியின் வாசற் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணைப் பார்த்துக் கண் ஜாடையில் அழைக்க, அவள் கொடி முல்லையம்மாளின் அருகில் வந்து, தனது தலை மீது வைத்திருந்த பெருத்த தாம்பாளத்தைக் கீழே இறக்கி வைத்து அதன் மேலே மூடப்பட்டிருந்த போர்வையை விலக்கினாள். அதற்குள் விலை உயர்ந்த இரண்டு பனாரீஸ் ரவிக்கைத் துண்டுகள், சீமை இலந்தைப் பழங்கள், ஆரஞ்சுப் பழங்கள், செவ்வாழைப் பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலிய வஸ்துக்கள் காணப்பட்டன. தான் அவ்விதமான வஸ்துக்களைக் கொணர்ந்ததைப் பற்றி மனோன்மணியம்மாள் ஏதாவது தாறுமாறாகக் கூறுவாள் என்று கொடி முல்லையம்மாள் எதிர் பார்த்தாள். ஆனாலும், அவ்வாறு அவள் பற்பல விஷயங்களைப்