பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

217

பற்றி அபிப்பிராயங் கூறுவதைக் கேட்பதால், அவளது குணாதிசயங்களையும் மனப்போக்கையும் நன்றாக அறிந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்த்தாள் ஆதலால், அவள் தனது வேலைக்காரப் பெண்ணையும் மனோன்மணியம்மாளினது முகத்தையும் மாறிமாறிப் பார்த்துக் புன்னகை தவழ்ந்த முகத்தோடு பேசத் தொடங்கி, “நாம் நம்முடைய பட்டிக்காட்டு வழக்கப்படி ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கொண்டு போகிறது போல இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறோம். நம்முடைய மரியாதையையும், பிரியத்தையும், நாம் சந்திப்பது சுட காரியம் என்பதையும் காட்ட வேண்டும் என்று வெளியூர்களில் வழக்கமாக வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படிப் போகாமல் வெறுங்கையோடு போனால், அதை ஜனங்கள் அவமரியாதையாக மதிப்பார்கள். ஆனால் நாம் இதை எல்லாம் இங்கே கொண்டு வந்தது மனோன்மணியம்மாளுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை; இருந்தாலும் இதைப்பற்றி கோபங் கொள்ளாமல் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறிய வண்ணம் தனது வேலைக்காரியைப் பார்த்து, “இந்த வீட்டு வேலைக்காரி அதோ வெளியில் நிற்கிறாள்; அவளைக் கூப்பிட்டுக் கொண்டு வா. அவள் இந்தச் சாமான்களை எடுத்து உள்ளே கொண்டு போய் வைக்கட்டும்” என்று கூறினாள்.

அதைக் கேட்ட மனோன்மணியம்மாள், “நம்முடைய நாட்டு வழக்கம் ஒவ்வொன்றும் இப்படித்தான் குழந்தைப் பிள்ளை விளையாட்டாக இருக்கிறது. வயசு முதிர்ந்த பெரியோர்கள் கூட மனம் கூசாமல் இந்தக் காரியங்களை எல்லாம் செய்வதோடு இதை ஒரு பெருமையாகவும் சுபகாரியமாகவும் மதிக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வருவது எங்களை மரியாதைப் படுத்துவதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உண்மையில் எப்படி அர்த்தம் ஆகிறதென்றால், இந்தச் சாமான்கள் எல்லாம் எங்களிடம் இல்லை என்றோ, அல்லது, இவைகளை நாங்கள் பெறமுடிய வில்லை என்றோ நினைத்து நீங்கள் இவைகளைக் கொண்டு வந்து எங்களைச் சந்தோஷப்படுத்த முயற்சிப்பது போல இருக்கிறதே அன்றி