பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

மாயா விநோதப் பரதேசி

சாத்விகமாக இருப்பதும், அற்ப விலை உள்ளவைகளுமான பொருள்களை நாம் உபயோகிக்கிறோம். நாம் காலணா விலை உள்ள இயற்கைப் பொருளான சீயக்காயை உபயோகிக்கிறோம். அவர்கள் நாலனா விலையுள்ள செயற்கைப் பொருளான சோப்பை உபயோகிக்கிறார்கள். நாம் ஒரு தம்பிடி விலையுள்ள இயற்கைப் பொருளான மஞ்சளை முகத்திற்குப் பூசிக் குளிக்கிறோம். அவர்கள் ஒரு ரூபாய் விலையுள்ள ரோஸ் பவுடரை முகத்திற்குப் பூசிக் கொள்ளுகிறார்கள். நாம் ஒரு காசு விலையுள்ள இயற்கைப் பொருளான தாம்பூலத்தை உபயோகப்படுத்தி ஜீரண சக்தியையும் உடம்பின் சுறுசுறுப்பையும் முகக்களையையும் உண்டாக்கிக் கொள்ளுகிறோம். அவர்கள் நூற்றுக் கணக்கில் விலை உள்ள செயற்கைப் பொருள்களான ஒயின்களையும் சாராயங்களையும் உபயோகித்து முகக்களை, ஜீரணசக்தி, சுறுசுறுப்பு முதலியவைகளை உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். நம்முடைய ஸ்திரீகள் 25 ரூபாய் விலையுள்ள இரண்டு புடவைகளையும், 5 ரூபாய் விலை உள்ள நான்கு ரவிக்கைகளையும் வைத்துக் கொண்டு ஒரு வருஷகாலத்தைக் கடத்தி விடுவார்கள். அது வெள்ளைக்கார ஸ்திரீகளுடைய ஒருகால் பூட்சின் விலைக்குக் காணாது. அவர்கள் ஒருமணி நேரத்துக்கு ஒருவித சில்க் ஆடை அணிவார்கள். அவர்கள் மணிக்கட்டில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் விலையை, நம்மவர்களுடைய எல்லா நகைகளின் விலையையும் சேர்ந்து எட்டாது. இப்படி இருக்க, நம்மவர்கள் அநாவசியமாக நம்முடைய செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதும், வெள்ளைக்காரர் செலவுகளைக் குறைக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல. ஆனால் நீங்கள் சம்பந்தப்பட்ட வரையில் இந்த வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலியவற்றின் செலவுகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இவைகளுக்குப் பதிலாக வெள்ளைக்காரர்கள் உபயோகிக்கும் சாமான்களை எல்லாம் நீங்கள் உபயோகப்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் இரண்டு நாகரிகத்திலும் ஒட்டாமல் நடுமத்தியமாக இருப்பது நிரம்பவும் மெச்சத் தகுந்ததே. இதைப்பற்றி கந்தசாமி கேள்விப்பட்டால் நிரம்பவும் சந்தோஷம்