பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மாயா விநோதப் பரதேசி

சாதாரணமாகவே பேசத் தொடங்கி, “வெள்ளைக்காரருடைய துஷ்டச் செய்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். அவைகளை எல்லாம் நாம் ஏன் கவனிக்க வேண்டும்? அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மாத்திரம் கிரகித்துக் கொண்டு அவ்வளவோடு நின்று விடுவோமே. என் சுயேச்சைப்படி காரியம் நடப்பதாய் இருந்தால், நான் கோவிலில் போய் மோதிரம் மாற்றிக் கொள்வதே போதும் என்று சொல்லி விடுவேன். என் தகப்பனார் ஒருவர் இருக்கிறார். இன்னம் பிள்ளை வீட்டார் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அதற்கு இணங்கமாட்டார்கள். எத்தனையோ யுகம்யுகமாக நம்முடைய மனிதர்களின் இரத்தத்தில் ஊறி இருக்கும் இந்தப் பழைய பழக்க வழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் நம்மில் படித்தவரையும் விட்டு எளிதில் போகிறதில்லை அல்லவா? அதற்கு நாம் கொஞ்சம் இடங்கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனாலேதான் நம்முடைய முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. என்ன செய்கிறது” என்றாள்.

அதற்குள் கொடி முல்லையம்மாளின் வேலைக்காரி சென்று மனோன்மணியம்மாளின் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு வந்தாள் ஆகையால், அந்த வேலைக்காரி ரவிக்கைத் துண்டுகள் முதலியவை இருந்த தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஓர் அறைக்குள் சென்றாள். வந்திருப்பவர்களை மரியாதையாக உபசரித்து வைத்திருக்கும்படி பட்டாபிராம பிள்ளை டெலிபோன் மூலமாகச் சொல்லியது நினைவிற்கு வந்தது. ஆகையால், மனோன்மணியம்மாள் கொடி முல்லையம்மாளை நோக்கி, “அம்மா இப்போது பலகாரம் முதலியவை சாப்பிடும் நேரமாகிறதே. உங்களுக்கெல்லாம் ஏதாவது சிற்றுண்டிகள் தருவிக்கட்டுமா?” என்றாள்.

அந்த வார்த்தையைக் கேட்டுக் கொடி முல்லையம்மாள் நிரம்பவும் சந்தோஷம் அடைந்தவள் போலத் தனது முகத்தை இனிமையாகவும் மலர்ச்சியாகவும் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கி, “நீங்கள் சொல்வதைக் கேட்டு சந்தோஷமடைந்தேன். நாங்கள் பழம் பாக்கு வெற்றிலையைக் கொண்டு வந்ததைக்