பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

229

அவருடைய கச்சேரி 4-மணிக்கு மூடப்படுமாம். உடனே புறப்பட்டு 4½ மணிக்குள் அவர் இங்கே வந்து விடுவார்; தாம் வருகிற வரையில் இங்கேயே இருக்கும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னார். ஆகையால் நீங்கள் தயைசெய்து இன்னம் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போக வேண்டும். இப்போது மணி மூன்றுக்கு மேல் ஆகிறது. இன்னம் ஒருமணி நேரத்தில் அவர் வந்துவிடுவார் “ என்றாள்.

அதைக் கேட்ட கோபாலசாமியும் கொடி முல்லையம்மாளும் திடுக்கிட்டு திகில் அடைந்தனர். தாம் வந்திருப்பதாய் டலாயத்தின் மூலமாகக் கேள்வியுற்றவுடன் மனோன்மணியம்மாள் டெலி போன் மூலமாய்த் தனது தகப்பனாரோடு பேசி இருக்கிறாள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. அவருடைய கண்ணில் படாமல் தாங்கள் அவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டு வந்தவர்கள் ஆதலால், அது அவர்களால் எதிர்பார்க்கப்படாத சம்பவமாக இருந்தது. அவளது தந்தை வந்து தங்களோடு பேசினால், அவர் ஒருகால் உண்மையைக் கண்டு கொள்வாரோ என்ற அச்சமும் கவலையும் தோன்றி அவர்களது மனதைக் கலக்கத் தொடங்கின. ஆனால் கொடி முல்லையம்மாள் அன்னிய புருஷருக்கு எதிரில் வராமல் நாணிக் கோணி மறைவாக இருக்கும் கர்னாடக ஸ்திரீ ஆதலால், பட்டாபிராம பிள்ளை கொடி முல்லையம்மாள் தனக்குள் ஒர் பிள்ளையை ஒளிய வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டு கொள்ள இயலாது என்ற எண்ணம் அவர்களது மனதில் தோன்றியது. பெண்ணைப் பார்க்க வந்த தாம், வீட்டின் தலைவர் வருவதற்குள் அவசரப்பட்டுக் கொண்டு போவது சந்தேகத்திற்கு இடங்கொடுக்கும் என்ற எண்ணமும் அவர்களது மனதில் தோன்றியது. ஆகவே, தாம் பட்டாபிராம் பிள்ளை வரும் வரையில் இருந்து அவர் சந்தேகப்படாதபடி சொற்ப நேரம் பேசிச் செலவு பெற்றுக் கொண்டு போய்விடுவதே உசிதமானதென்று அவர்கள் இருவரும் நினைத்தனர்.

அந்தச் சமயத்தில் வேலைக்காரி காப்பி முதலியவற்றைக் கொணர்ந்து மனோன்மணி அம்மாளுக்கருகில் போடப்பட்டிருந்த