பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மாயா விநோதப் பரதேசி

மாத்திரம் அல்ல. எங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் அப்படியே தான் சாப்பிடுவார்கள். மன்னார்குடியில் உள்ள என் தமக்கை வீட்டில் உள்ள எல்லோரும் அதையேதான் சாப்பிடுவது வழக்கம். உங்களுக்குப் புருஷராக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கந்தசாமிக்குப் பழைய சாதத்தில் நிரம்பவும் பிரியம். ஒரு நாளைக்கு அது சரியான பக்குவப்படி இல்லாமல் போய்விட்டால், அவன் அன்று பட்டினிதான் கிடப்பான். காப்பி என்ற பேச்சே எங்களுடைய வீட்டில் கிடையாது. ஏதாவது விசேஷ தினங்கள் வருமானால், அன்றுதான் பகூடிணங்கள் செய்வார்கள். பகூடிணங்களை நாம் தினம் தினம் செய்தால் அதன் ருசியும் நாக்குக்கு உறைக்கிறதில்லை. உடம்பும் கெட்டுப் போகும். அதற்காகத்தான், அவைகளை விசேஷ தினங்களில் மாத்திரம் செய்வதென்று முன்னோர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் நமக்கு அதிகச் செலவு ஏற்படுகிறதென்ற எண்ணத்தினால் அப்படிச் செய்கிறதில்லை. முக்கியமாய் உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் கருத்து. என் தமக்கையின் வீட்டில் ஏராளமான செல்வமும், சகலமான சாமான்களும் கணக்கில்லாமல் கிடந்து இறைப்படுகின்றன. ஆனாலும், பெருந்தீனி பெரும் ரோகம் என்பது கைகண்ட விஷயம். ஆகையால், ஆகார விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் என்பது நம்முடைய பெரியோரின் கொள்கை. இந்தக் காப்பி பலகாரங்கள் எல்லாம் உண்டான பிறகு மனிதருக்கு வியாதிகள் அதிகரித்து விட்டன. முக்கியமாய் அஜீரணம், வயிற்றுவலி, நீர்ரோகம் முதலிய வியாதிகள் பெருகி விட்டன. மனிதர் ஐம்பது அறுபது வயசுக்கு அதிகம் இருப்பதில்லை. நம்முடைய முன்னோர் இரண்டே வேளை திருப்தியாகப் போஜனம் செய்து வந்தார்கள். அடிக்கடி கண்ட வஸ்துக்களைத் தின்பதற்கு அவர்கள் நச்சுத்தீனி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். நச்சு என்றால் நஞ்சு அல்லது விஷம் என்று பொருள் அல்லவா. அது விஷமாக முடியும் என்பது நம் முன்னோருடைய கொள்கை. குழந்தைகள் இடைவேளைகளில் பழைய அமுது உண்பார்கள். எல்லோரும் நன்றாக உழைத்து வேலை செய்வார்கள். நல்ல பசியும் உண்டாகும். உடம்பு