பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மாயா விநோதப் பரதேசி

என்பதும், இதில் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்திருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியாது. இந்த பிஸ்கோத்தில் கோழி முட்டை முதலிய மாம்ச வஸ்துக்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்று இருக்கிறேன். சுத்த சைவர்களாகிய நாம் இதை எல்லாம் சாப்பிட்டால், இதற்குள் சம்பந்தப்பட்டிருக்கும் அசுசியான வஸ்துக்கள் எல்லாம் நம்முடைய தேகத்தில் சேரும் அல்லவா? அதை நாம் யோசிக்க வேண்டாமா? நம்முடைய ஊரில் பிராம்மணர்கள் சுத்தமான மரக்கறி பதார்த்தங்களைக் கொண்டு செய்துள்ள பலகாரங்களை வாங்குவதற்குக்கூட நாம் யோசிக்கிறோம். மற்ற ஜாதியார் செய்து விற்கும் பதார்த்தங்களை நாம் கண்ணாலும் பார்ப்பதில்லை. அப்படி இருக்க, இன்னவனால் இன்னின்ன பதார்த்தங்களைக் கொண்டு செய்யப் பட்டது என்ற விவரத்தையே தெரிந்து கொள்ளாமல் வெளி தேசத்தில் இருந்து வரும் கண்ட பதார்த்தங்களை எல்லாம் நாம் வாங்கித் தின்பது உசிதமல்ல என்பது என்னுடைய அபிப்பிராயம். இதைத் தின்னும் நாம் ஏன் ஒரு வெள்ளைக்காரனுடைய வீட்டில் சாப்பிட மறுக்கிறோம்? இந்த வஸ்துக்களை வைத்துக் கொண்டு தானே அவன் போஜனம் செய்கிறான். அவனால் தயாரிக்கப்பட்ட வஸ்துவை அவனோடுகூட உட்கார்ந்து உண்பது மாத்திரம் தவறு போலிருக்கிறது. நான் பிஸ்கோத்தைப் பற்றி இழிவாகப் பேசுகிறேனே என்று நினைத்து நீங்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். நான் அதைச் சாப்பிடாததற்குக் காரணம் இன்னதென்றுதான் சொல்லுகிறேனே அன்றி வேறல்ல. உங்களுடைய அபிப்பிராயம் வேறு விதமாக இருக்கலாம். அதுவுமன்றி, நீங்கள் நெடுங்காலமாக அதைச் சாப்பிட்டுப் பழகியவர்கள் போல் இருக்கிறது. ஆகையால், உங்கள் காரியம் நடக்கட்டும்” என்றாள்.

அதைக்கேட்ட மனோன்மணியம்மாள், “நீங்கள் இங்கிலிஷ் பாஷையே தெரியாதென்று சொல்லுகிறீர்கள். இங்கிலீஷ் காரருடைய விஷயங்களை எல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அதுவுமன்றி, இங்கிலிஷ்காரருடைய சம்பந்தமே கொஞ்சங்கூட நமக்கு உதவாதென்ற அபிப்பிராயமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்! இங்கிலீஷ்காரருடைய