பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மாயா விநோதப் பரதேசி

பிறப்பாகிய துன்பத்தில் இருந்து விடுபட்டு, பரமாத்மாவோடு ஐக்கியப்பட்டிருப்பதே எல்லாவற்றிற்கும் மேம்பட்ட பேரின்பம் என்பதும் நம்முடைய முடிவு. ஆகையாlல் நமமுடைய முன்னோர்களான மகரிஷிகளின் காலத்தில் இருந்து நம்மவர்கள் இதே தத்துவங்களைக் கடைப்பிடித்து அவரவர்களுடைய சக்திக்குத் தகுந்தபடி அவைகளை அனுபவத்திற்குக் கொணர்ந்து இருக்கிறார்கள். அந்த நோக்கத்தோடு நம்மவர் தம்முடைய பஞ்சேந்திரிய பாசங்களைக் குறைத்துக் கொள்ளும் கருத்துடன் சாத்விகமான ஆகாரங்களைப் புசித்து, ஜீவஹிம்சை முதலிய வற்றை நிவர்த்தித்து, பரோபகாரத்தின் பொருட்டே இந்த சரீரம் உண்டாயிருக்கிறது என்ற சுயநலமற்றதான மனப்போக்கைப் பெருக்கி, உலக சிருஷ்டி முழுதும் பரமாத்மாவின் வியாபகம் ஆதலால் அதில் நமக்குப் பகைமையானதும், நம்மிலும் வேறுபட்டதுமான சிருஷ்டியே கிடையாது என்ற உறுதியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாவர் என்றும், ஆதலால் மனிதன் உலகில் உள்ள உன்னத பதவியான அரசபதவியைக் கூட நாடாமல், எல்லாவற்றிற்கும் மேம்பட்டதும், என்றும் நிலைத்ததுமான மோட்ச பதவியையே நாட வேண்டும் என்றும் நம்மவர் முயன்று வந்திருக்கிறார்கள். நம்மவரில் நவகோடி திரவியம் படைத்த சீமானைக் காட்டிலும், கோவணத்தைக்கூடத் துறந்த ஆத்ம ஞானியே நிகரற்ற குபேர சம்பத்திலும் மேலான நிதியைப் படைத்தவன் என்பதே நம்முடைய உறுதியான கொள்கை. ஆகவே, நம்முடைய தேசத்தை ஆண்டு வந்த மன்னர்கள்கூட உலகைத் துறந்த மகான்களின் காலில் விழுந்து அவர்களது பாத துளியைத் தமது சிரசின்மேல் வகித்துக் கொண்டதாக நாம் படித்திருக்கிறோம். நம்மவர்கள் பேரின்ப நாட்டத்தையே முக்கியமாக மதித்தவர்கள். ஆதலால், இந்த உலகை ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இந்த உலகத்தை ஆள்வதே புருஷார்த்தம் என்று நம்மவர்கள் சாசுவதமாக மனிதரை சிப்பாயிகளாக்கி, குண்டு பீரங்கி தளவாடங்களோடு எப்போதும்