பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

243

வெட்டி கோழி வெட்டி கள்ளு சாராயம் வைத்து நைவேத்தியம் செய்து, “சாமி ஆண்டவனே! இதுவரையில் நாங்கள் எத்தனையோ வீடுகளில் கொள்ளை அடித்தோம். அதற்கெல்லாம் நீ துணையிருந்து, எங்களுக்கு ஏராளமான பொருள்களை சம்பாதித்துக் கொடுத்தது போல் இப்போது போகும் இடத்திலும் துணையிருந்து காப்பாற்றப்பனே” என்று வேண்டிக் கொள்வார்களாம். அது போல, வெள்ளைக்காரர் கடவுளை எதற்காக ஸ்தோத்திரம் செய்கிறார்கள் என்றால், இறப்பு பிறப்பாகிய சாகரத்தையும், பூலோக பற்றையும் விலக்கி, மோட்சத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகிறதில்லை. உலகத்தில் தங்களை நல்ல பதவியில் வைத்து, சூரிய, சந்திரர், நட்சத்திரங்கள், ஆடுமாடுகள், பறவைகள், தானியங்கள், பழங்கள், புஷ்பங்கள், தண்ணிர் முதலியவற்றைத் தங்களுடைய உபயோகத்துக்காகப் படைத்து வைத்திருப்பதற்காக நன்றி செலுத்துவதாகவும், அது போலவே ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆகாரங்களை எல்லாம் எப்போதும் கொடுக்க வேண்டும் என்றும், தாங்கள் செய்யும் குற்றங்களை எல்லாம் மன்னிக்க வேண்டும் என்றும் ஸ்தோத்திரம் செய்கிறார்கள். அவர்களுக்கும் கடவுளுக்கும் அவ்வளவே சம்பந்தம். கடவுள் எல்லோருக்கும் பிதாவாம். மனிதர்கள் எல்லோரும் ஒருவருக் கொருவர் சகோதரர்களாம். கடவுளைப் பற்றியும், உலக சிருஷ்டியைப் பற்றியும், அவை இரண்டிற்கும் உள்ள சம்பந்தம் இன்னது என்பதைப் பற்றியும் வெள்ளைக்காரர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறார்கள் என்பது மேலே கூறப்பட்ட அவர்களது தத்துவங்களால் நன்கு விளங்கும். நமக்கும் அவர்களுக்கும் இப்படிப்பட்ட கொள்கை வேறுபாடு இருப்பதால், நாம் இந்த உலக விஷயங்களில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற நினைவையே கொள்ளாமல் அது விஷயத்தில் எவ்வித முயற்சியும் செய்யாமலும் இருந்து வருகிறோம். வெள்ளைக் காரர்கள் எப்போதும் உலகத்தை ஆண்டு எல்லோரையும் அடக்கி சகலமான சுகங்களையும் இம்மையிலேயே அனுபவிக்க் நினைப்பவர்கள் ஆதலால், அவர்கள் பலவிதமான யந்திரங்களையும் தந்திரச் சூழ்ச்சிகளையும் செய்து மாயாவித்தைகளை