பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மாயா விநோதப் பரதேசி

செளகரியம் போல சொற்பகாலம் கழித்தோ நடத்துவதும் வழக்கம் என்று நான் கேள்வியுற்று இருக்கிறேன். பெண்ணும், மாப்பிள்ளையும் கொஞ்ச காலம் பழகிய பின், ஒருவரது குணம் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால், அவர்கள் அதற்குமுன் பூர்வாங்கமாகத் தமக்குள் செய்து கொண்ட நிச்சயதார்த்தத்தை நிவர்த்தி செய்வதும் வழக்கமாம். அது போலவே ஒரு பெண் ஒருவர் பின் ஒருவராக பல மாப்பிள்ளை களோடு பழக நேர்வதும் சகஜமாம். நம்முடைய தேசத்தில் நம்மவர் அப்படிச் செய்கிறதில்லை. வயசு வந்த பெண் அன்னிய புருஷர்களோடு பழகுவதும், அவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதும் முற்றிலும் தவறு என்ற கொள்கையை நாம் கடைப்பிடிப்பவர்கள். வயசு வந்த பெண் அன்னிய புருஷரோடு பழகி, அவர்களில் யார் அழகுடையவர்கள், யார் நற்குணம் உடையவர்கள் என்று ஆராய்ச்சி செய்யும் படியான மனப்போக்கை உடையவர் களானால், அதனால் பிற்காலத்தில் பெருத்த அநர்த்தம் விளையும் என்பது நம்மவரின் கொள்கை. ஏனென்றால், அப்படிப்பட்ட மனப்போக்கை உண்டாக்கிக் கொண்டவளுக்கு வாய்த்த புருஷன் ஒருகால் அவளுக்குப் பிடிக்காமல் போய்விடும் பகூடித்தில், அவளது மனம் பிறபுருஷர்களிடத்தில் நாட்டமாக இருக்கும் என்று நம்முடைய பெரியோர்கள் அனுபவத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கும் வெள்ளைக்காரர்கள் ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் மன ஒற்றுமை ஏற்படாவிடில், நியாயஸ்தலத்தின் மூலமாக அவர்கள் தங்களுடைய கலியான பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ற முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு ஸ்திரியோ புருஷனோ பல கலியானங்கள் செய்து ரத்து செய்து கொள்ளலாம். நம்மவர் அதை ஆண் தன்மையாகக் கருதவில்லை. தனக்கு மனைவியாய் இருந்த ஒரு ஸ்திரீ இன்னொருவனுக்கு மனைவியாய் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆண்மைத் தனமல்ல என்பதும், கேவலம் பேடித்தனம் என்பதும் நமது கொள்கை. அதுவுமன்றி ஒரு புருஷனை ஒரு ஸ்திரீ மணந்து கொண்டால் இருவரில் ஒருவர் மாண்டால் அன்றி, அந்தக் கலியான பந்தம் வேறு விதத்தில்