பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மாயா விநோதப் பரதேசி

காரரில் பெண்கள் ஏதாவது பரீட்சையில் தேறி இருக்க வேண்டும், பாட்டு பாடுதல், தையல்வேலை செய்தல், சித்திரம் வரைதல், முதலியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புருஷர் சந்தோஷப்படும்படி அவர்கள் புதிதுபுதிதான பல விஷயங்களைப் பற்றி எப்போதும் பேசும்படியான வாக்கு வண்மை உடையவர்களாக இருக்கவேண்டும். இந்த அம்சங்களில் ஒரு ஸ்திரீ அவசியம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோட்பாடு. நம்முடையது அப்படிப்பட்டதல்ல. நம்முடைய பெண்களுக்கு அவைகள் எல்லாம் தேவையில்லை. நம்மவர்கள் தங்கள் மனசையும் தேகத்தையும் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு புருஷன் மாமனார் மாமியார் முதலியோரது மனதிற்கு ஒத்தாற்போல அடங்கி நடந்து வீட்டின் காரியங்களைத் தன்னால் இயன்றவரை அன்போடு செய்து, கொண்டவனுடைய குடும்பத்தாரோடு ஐக்கியப்பட்டுப் போகும் குணம் ஒன்றே போதுமானது. நம்முடைய ஜனங்களின் தேவை நிரம்பவும் சொற்பமானது ஆகையால், குடும்பத்திற்குத் தேவையான பொருளை அதன் தலைவனே சம்பாதித்து விடுவான் ஆதலால் பெண்பாலார் வெளியில் போய் பிரத்தியேகமான் ஜீவனோபாயம் தேடவேண்டும் என்பதில்லை. வெள்ளைக்காரர்கள் கொள்ளை கொள்ளையாய்ப் பொருள் தேடினாலும், அவர்களுடைய பெண்பாலாரும் பட்சிகள் போலப் பறந்து வெளியில் போய் அரும்பாடு பட்டுப் பொருள் தேடிவராவிட்டால், அவர்கள் தங்களுடைய அபாரமான தேவைகளை நிவர்த்திக்க முடிகிறதில்லை. நாம் அரை வயிற்றுக்கு உண்டாலும், பட்டினி கிடந்தாலும், நமது பெண் மக்கள் போய் சம்பாதிக்க விடுவது ஆண்மைத்தனம் அல்ல என்பதும், அதைப் போல ஹீனத்தனம் வேறே இல்லை என்பதும் நம்மவரின் மனப்பான்மை. வெள்ளைக்காரருக்கு எப்படியாவது பெருத்த பொருள் தேடுவதொன்றே பிரதானம். ஸ்திரிகளும் சம்பாதிக்க வேண்டும் புருஷரும் சம்பாதிக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்குப் பல செளகரியங்களும் இருக்கின்றன. அவர்களுடைய பெண் பிள்ளைகள் அடுப்பு மெழுகிப் பாத்திரந் தேய்த்து சமையல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.