பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

251

அவர்கள் உண்பது ரொட்டி ஆகையால், அவர்களுக்குத் தேவையான ரொட்டி, சாராயம் முதலியவற்றைக் கடையிலும், மற்ற பதார்த்தங்களை ஹோட்டலிலும் வாங்கிக் கொண்டால், அவர்களுடைய காரியங்களும் வசதிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகின்றன. நம்முடைய காரியங்கள் எல்லாம் வேறு மாதிரியானவை. நீங்கள் கந்தசாமியின் வீட்டுக்குப் போனால், நீங்கள் இப்படி நாற்காலியில் உட்கார முடியாது; காப்பி பிஸ்கோத்து முதலியவற்றைச் சாப்பிட முடியாது. சாப்பிட்டாலும் எச்சிலைத் துணியில் துடைத்துக் கொள்ள முடியாது. துல்லியமான மஸ்லின் துணிகளே உங்கள் மனசுக்குப் பிடித்தவை என்றும், அவைகளையே நீங்கள் உபயோகித்து வருவதாகவும் சொல்லுகிறீர்களே. நீங்கள் கந்தசாமியைக் கலியாணம் செய்து கொண்டால் இம்மாதிரியான வெள்ளை உடைகளை அணிய முடியாதே. ஏனென்றால், நம் தமிழ்நாட்டில் வெள்ளை உடைகளை அமங்கலிகளும், தாசிகளுமே கட்டுவதென்ற வழக்கம் இருந்து வருவதால், நீங்கள் அப்படிச் செய்ய அவர்கள் இணங்க மாட்டார்கள். வெள்ளை நிறம் உள்ள ஆடைகளை சுமங்கலிகள் கட்டக்கூடாது என்ற விதி ஒரு புறம் இருக்க, ஆடைகள் அணியும் விஷயத்தில் நம்மவருக்கும், வெள்ளைக்கார ஸ்திரீகளுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வயசு முதிர்ந்தவராக இருந்தாலும் மெல்லிய சிறுசிறு துணிகளைக் கொண்டு தைக்கப்பட்ட பாவாடை, கெளன் முதலியவைகளை மாத்திரம் அணிவதோடு, தங்களுடைய அங்க அமைப்பு முழுதும் அழகாக வெளியில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்குத் தோதாகத் தைக்கப்பட்ட ஆடைகளை அணிகிறார்கள். அப்படி அணிவதால் தாம் வடிவழகியர் என்று பிறர் மதிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம். அப்படிச் செய்வதால், ஸ்திரீகளின் கற்புக்கு இழுக்கு நேரும் என்ற எண்ணத்தோடு நமது ஸ்திரிகள் தம்முடைய உடம்பின் அமைப்பு வெளியில் தெரியாதபடி மறைக்க வேண்டும் என்ற கருத்துடன் பதினெட்டு முழமுள்ள தடித்த புடவைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்ற நற்பழக்கத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச்