பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மாயா விநோதப் பரதேசி

விபரீதமான சொற்களை அவர் உபயோகப்படுத்தி இருக்க மாட்டார் என்ற எண்ணம் தோன்றியது. ஆகையால் வேறு வகையில் அவர் தம்மைப்பற்றித் தப்பான செய்தி எதையோ தெரிந்துகொண்டு வந்திருக்கிறார் என்ற நிச்சயமே ஏற்பட்டது. ஆகவே பெண் வேஷம் தரித்திருந்த கந்தசாமி அப்போதும் ஸ்திரியைப் போலவே நாணிக் கோணி திடுக்கிட்டு எழுந்து ஒரு மூலையில் போய் மறைந்து தலை குனிந்து நின்றான். அந்த மோகினி அவதாரத்தைக் கண்ட பட்டாபிராம பிள்ளை மிகுந்த பிரமிப்பும், ஆச்சரியமும் அடைந்தார். ஆனாலும், அவர் அவளை உண்மையில் ஒரு ஸ்திரி என்றே மதித்தார் ஆகையால், அவளுடன் பேச விரும்பவும் இல்லை; அவளை மேன்மேலும் உற்று நோக்கவும் இல்லை. அவர் தமது கையில் வைத்திருந்த ஒரு சிவப்பு காகிதத்தை மனோன்மணிக்குக் காட்டி, “இதோ பார்த்தாயா? இது மன்னார்குடியில் இருந்து வந்த தந்தி; இது இப்போதுதான் வந்தது. இதைப் பார்த்த உடன் எனக்கு நிரம்பவும் திகில் உண்டாகிவிட்டது. உடனே புறப்பட்டு அவசரமாக வந்தேன்’ என்றார். அவர் பேசிய போதே, அவரது முகம் கைகால்கள் எல்லாம் மிகுந்த படபடப்பையும் கோபத்தையும் காட்டின. அவர் சென்னதைக் கேட்ட அவரது புதல்வி தந்தியைப் படியுங்கள் என்றாள்.

உடனே பட்டாபிராம பிள்ளை அதைப் படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

உங்கள் தந்தி ஆச்சரியத்தையும் கவலையையும் உண்டாக்கியது. என் சம்சாரத்துக்கு கோமளேசுவரன் பேட்டையிலாவது வேறு எந்த இடத்திலாவது தங்கை முதலிய உறவினர் இல்லை. சட்டைநாத பிள்ளை சிறையிலிருந்து வெளிப்பட்ட விவரம் பத்திரிகைகளின் மூலமாய் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவருடைய தம்பி முதலியோர் நம்மிடம் பகை வைத்திருப்பது சகஜமே. நம்முடைய பகைவர் ஏதாவது கெட்ட கருத்தோடு அவ்வாறு எங்கள் உறவினர் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கலாம். நீங்கள் அவர்களிடம் எச்சரிப்பாக நடந்து கொள்ளுங்கள். பெண்ணினிடம் எங்களைப் பற்றி ஏதாவது