பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

மாயாவிநோதப் பரதேசி

நாலைந்து தலைமுறைகளுக்குப் பிறகாவது கண்டுபிடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். இப்போது அவர்கள் மனிதர் 150, 200 வயது வரையில் ஜீவித்திருக்கும் வழியை ஒரு வேளை கண்டுபிடித்தாலும் பிடிக்கலாம். அவ்வளவு தான் இப்போது சாத்தியமாகும் என்று நினைக்கிறேன். ஏன், நம்முடைய முன்னோர்களும், ரிஷிகளும், பல நூற்றாண்டுகள் உயிரோடு இருந்ததாக நாம் படித்திருக்கிறோம் அல்லவா. இப்போது நம்முடைய அனுபவத்திலேயே எத்தனையோ பேர், நூறு வயசு, தொண்ணுறு வயசு இருந்து இறக்கிறதைக் கண்டிருக்கிறோம் அல்லவா.

கோபாலசாமி:- மெய்தான். மனிதர்கள் நீண்ட ஆயிசு உடையவர்களாகவும் சிரஞ்சீவிகளாகவும் ஆகிவிட்டால், பிரம்மதேவன் எமன் முதலிய தெய்வங்களுக்கெல்லாம் உத்தியோகம் போய் விடுமே.

கந்தசாமி:- ஆம், அப்படித்தான் முடியும். இயந்திரங்களும் தந்திரங்களும் அதிகரிக்க அதிகரிக்க, மனிதருக்கு எப்படி வேலை இல்லாமல் போகிறதோ, அதுபோல, தெய்வங்களுக்கும் வேலையில்லாமல் போவது சகஜந்தானே! நாம் நன்றாக யோசனை செய்து பார்க்கப் போனால், நம்மைப்போன்ற ஜீவஜெந்துக்கள் எல்லாம் நேரம் காட்டும் கடிகாரங்களுக்குச் சமம் என்று தான் நினைக்க வேண்டி வரும் போல் இருக்கிறது. கடிகாரத்திற்குள் கெட்டியான சக்கரங்கள் முதலிய யந்திரங்களை வைத்து விட்டால், அது என்றும் சிரஞ்சீவியாக ஒடிக் கொண்டிருக்க வில்லையா. அதுபோல நம்முடைய உடம்பில் உள்ள கருவிகளையும் பலப்படுத்துவதால், நம்முடைய ஆயிசு காலம் அதிகரிக்குமானால், இன்னும் அதிக சூட்சுமமான தந்திரங்களால் நாம் நம்மை சிரஞ்சீவியாக்கிக் கொள்வது ஏன் முடியாது? அப்போது நம்முடைய உடம்பிற்குள் ஜீவாத்மா என்று ஒன்று இருக்கிறதென்றும், அது அதன் பூர்வ கர்மபலத்தின்படி ஜென்மம் எடுக்கிறதென்றும், ஒவ்வொரு ஜெந்துவிற்கும் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட காலவரம்புக்குமேல் ஒரு நொடி நேரங்கூட உயிரோடிருக்க முடியாது என்றும்,