பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

மாயா விநோதப் பரதேசி

அநாதைகளுக்கும் உபயோகித்து அதனாலேயே வறுமை அடைந்தவர் என்ற செய்தியும், அதன்பிறகு அவர் கெளரவப் போலீஸ் உத்தியோகம் வகித்து, தமது தேகத்தைக் கொண்டும் அபாரமான அறிவையும் மனோபலத்தையும் கொண்டும் தமது உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் பரோபகாரத்திற்கே அர்ப்பணம் செய்து வருகிறார் என்ற செய்தியும், அவர் அவ்வாறு உத்தியோகம் வகித்த பிறகு துஷ்டர்கள் எல்லோரும் நாசம் அடைந்து விட்டார்கள் என்ற செய்தியும் சிறிய குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தமையால், எவ்விதமான கைம்மாறும் கருதாமல் மழையாகிய அமிர்தத்தைப் பெய்து உலகத்தோரைக் காப்பாற்றி ரகூஜிக்கும் மேகம் போலத் தங்களுக்கெல்லாம் கணக்கில் அடங்காத நன்மைகளைச் செய்து வரும் புண்ணிய மூர்த்தியான திகம்பர சாமியாரினது உயிருக்கே ஹானி ஏற்படக்கூடிய மகா விபரீதமான சம்பவம் நேர்ந்து விட்டதே என்ற பெருத்த துக்கமும் கலக்கமும் தோன்றி எல்லோரது மனத்தையும் புண்படுத்தி உலப்பத் தொடங்கின. அத்தகைய புனித குண புருஷரைத் தாம் இழந்து விடப் போகிறோமே என்ற ஏக்கமும், அவரில்லாவிடில் மறுபடியும் துஷ்டர்களும் துன்மார்க்கர்களும் தலையெடுத்து விடுவார்களோ என்ற கவலையும் தோன்றி வதைக்கலாயின. அவ்வாறு பரப்பப்பட்ட விபரீதச் செய்தி மெய்யானதோ பொய்யானதோ என்பதை நேரில் கண்டு அறிந்து நிச்சயிக்கவும், அவரைப் பாம்புகள் கடித்தது உண்மையாய் இருக்குமாயின், தெய்விகத் தன்மை வாய்ந்த அந்த உத்தம புருஷரது அருள் வழிந்த முகத்தைக் கடைசியாக ஒருமுறை தரிசித்து வரவும் எண்ணி, ஆண் பெண்பாலார் அனைவரும் தத்தம் இருப்பிடங்களை விட்டுப் புறப்பட்டு மன்னார்குடியை நோக்கி விரைந்து சென்று திகம்பர சாமியாரினது பங்களாவைச் சூழ்ந்து கொள்ளலாயினர். பற்பல சுற்றுக் கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் ஏராளமாகப் புறப்பட்டு ஓடிவந்த காட்சி, கடலை நோக்கிச் செல்லும் எண்ணிக்கை அற்ற ஆறுகளின் பெரு வெள்ளக்காட்சி போல இருந்தது. அவ்வாறு சாமியாரினது பங்களாவின் அருகில் வந்த ஜனங்களுள் ஒவ்வொருவரும் உள்ளே சென்று அவரைப் பார்க்கவும், தம்