பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

271

ஆனாலும், பாம்பு விஷந் தீண்டப்பெற்ற மனிதர் தப்பிப் பிழைப்பது மகா துர்லபமான விஷயம் என்ற நினைவு அவர்களது மனதில் முக்கியமாக எழுந்தெழுந்து வதைத்துப் புண்படுத்திக் கொண்டிருந்தது ஆகையால், அவர் அநியாயமாக இறந்து போய் விடுவாரோ என்ற பயமே மும்முரமாய்த் தோன்றி மேலாடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகால் மரித்து விடுவாரானால், அது தங்களுடைய ஆயிசு காலம் முழுதும் மாறாத பெருந் துயரமாக இருக்குமே என்றும், அதன் பிறகு உலகமே பாழ்த்துப் போனது போலாகிவிடுமே என்றும், அதன் பிறகு என்ன செய்வது என்றும், எப்படி உய்கிறதென்றும் அப்போதே நினைத்து நினைத்து அபாரமான திகிலும் ஏக்கமும் சஞ்சலமும் கொண்டு நெருப்புத் தனல்களின் மேல் நடந்து செல்வோர் போலத் தத்தளித்துத் தயங்கித் தயங்கி உட்புறம் சென்றனர். அவர்களது தேகம் கட்டுக்கடங்காமல் பதறிப் படபடத்து ஒய்ந்து ஒரே தவிப்பு மயமாக இருந்தது. தாம் உள்ளே போனவுடன் எவ்விதமான கெட்ட செய்தியைக் கேட்க நேருமோ என்ற நினைவும், சாமியாரை எத்தகைய பரிதாபகரமான நிலைமையில் காணவேண்டி இருக்குமோ என்ற அச்சமும், கவலையும் தோன்றி அவர்களது கால்களைப் பின்புறம் இழுத்தன. ஆனாலும், அவர் பக்கத்தில் இழுத்துக் கொண்டே போனது. அத்தகைய நிலைமையில் தமது தாய் தந்தையர்கள் இல்லாமல் வெளியூருக்குப் போயிருக்கிறார்களே என்ற நினைவும், அவர்கள் வருவதற்குள் ஒருகால் ஏதாவது விபரீதம் நேர்ந்துவிடுமோ என்றும், கண்ணப்பா பெரிதும் கவலையுற்றுக் கலங்கி உருகினான். தாம் ஓடிவந்த கலவரத்தில், வடிவாம்பாளின் தாய் தகப்பன்மார்களான சிவக்கொழுந்தம்மாளுக்கும், சுந்தரம் பிள்ளைக்கும் அந்தச் செய்தியைச் சொல்லி அனுப்ப மறந்து வந்து விட்டோமே என்ற விசனமும் ஒரு புறத்தில் மனதை உலப்பியது. அத்தகைய பரம சங்கடமான நிலைமையில் அவ்விரு இளையோரும் பங்களாவின் உள்புறக் கட்டிடத்தை அடைந்து, முன் தாழ்வாரத்தில் ஏறினர். அவ்விடத்தில் ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் மிகுந்த கவலையும் மனக்குழப்பமும் பிரமையும் தோற்றுவித்த முகத்தினராய் நின்றனர். அவர்கள் கண்ணப்பர்