பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

மாயா விநோதப் பரதேசி

அவர்களது மனம் கட்டில் அடங்காமல் அபாரமாகப் பொங்கி எழுந்தது. கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிக் கன்னங்களின் மீது தாரை தாரையாக வழிந்து இறங்க ஆரம்பித்தது. வடிவாம்பாள் மிகுந்த ஆவலோடு அவளண்டை ஒடி, “நாச்சியாரம்மா! ஐயா பிழைத்துக் கொள்ளுவாரா? நீ ஏன் வெளியில் உட்கார்ந்திருக்கிறாய்? எஜமானியம்மாள் எங்கே இருக்கிறார்கள்? கதவு சும்மாதானே மூடப்பட்டிருக்கிறது?” என்றாள்.

அவர்கள் இருவரும் வந்ததைக் கண்டு வடிவாம்பாள் கூறிய சொற்களைக் கேட்ட வேலைக்காரி கட்டிலடங்கா மீன உணர்ச்சியும் சங்கடப் பெருக்கும் அடைந்து சரேலென்று எழுந்து, “அம்மா! வாருங்கள்! வாருங்கள்! ஐயாவுக்கு இப்படிப்பட்ட அபாயம் நேரும் என்று நாங்கள் சொப்பனத்தில் கூட நினைக்கவில்லையம்மா! இன்று காலையில் வழக்கம் போல எழுந்து, ஸ்நானம் செய்து நியம நிஷ்டை அநுஷ்டானங்களை எல்லாம் முடித்துக் கொண்டவர்கள் தாகத்துக்குத் தண்ணீர்கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் இப்படிப்பட்ட அவகேடு வந்து விட்டதே! இந்த அநியாயக் கொடுமையை என்னவென்று சொல்லுகிறது! ஆண்டவன் என்ன வழிவிடுவாரோ தெரிய வில்லையே! உள்ளே நாலைந்து வைத்தியர்கள் இருந்து படாத பாடெல்லாம் படுகிறார்கள். ஐயா இன்னமும் கண்ணைத் திறந்து கூடப் பார்க்கவில்லை. மனிதர் கூப்பிடுவதுகூட உறைக்காமல் ஸ்மரணை தப்பிப் போயிருக்கிறது. எஜமானியம்மாள் அழுதழுது அப்படியே உட்கார்ந்து போய்விட்டார்கள். ஐயாவுக்கு முன் அம்மாளுடைய உயிரே போய்விடும் போலிருக்கிறது. அடிக்கடி பலர் உள்ளே வந்து பேச்சுக் கொடுப்பது கூடாதென்று வைத்தியர்கள் சொன்னார்கள் ஆகையால், கதவு உள் பக்கத்தில் தாளிடப்பட்டிருக்கிறது. யாராவது வந்தால் தகவல் தெரிவித்து உள்ளே அனுப்பவோ வெளியில் அனுப்பவோ ஆக வேண்டு வதைச் செய்கிறதற்காக என்னை இங்கேயே உட்கார வைத்திருக்கிறார்கள். உங்களை எல்லாம் அழைத்து வரும்படி