பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

277

யாவது அவர்கள் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. மறுபடியும் கதவு மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டது. அவ்வாறு தாளிட்ட சிவகாமியம்மாள் வந்தவர்களோடு பேசாமல் அவ்விடத்தை விட்டு பக்கத்தில் இருந்த வேறோர் அறைக்குள் போய்விட்டாள்.

அவ்வாறு இரண்டொரு நிமிஷ நேரம் கழிந்தது. கண்ணப் பாவும், வடிவாம்பாளும் ஒருவாறு தங்களது சுயநினைவை அடைந்து தங்களது முகத்தில் இருந்த துணியை விலக்கிவிட்டு திகம்பரசாமியாரையும், அந்த அறையையும் கவனித்துப் பார்க்கலாயினர்.

திகம்பரசாமியார் அசைவற்றுப் பிணம் போலவே கிடந்தார். ஆனால் அந்த அறையில் வேறே மனிதர் எவரும் தென்படவில்லை. போலீசாரும், வேலைக்காரியும் கூறியபடி வைத்தியர்களாவது மந்திரவாதிகளாவது காணப்படவே இல்லை. தங்களுக்குக் கதவைத் திறந்து விட்டது சிவகாமியம்மாள் என்ற நினைவு அவர்களது மனதில் நன்றாக உண்டானது ஆனாலும், அவள் தங்களோடு பேசாமல் எங்கே போயிருப்பாள் என்ற சந்தேகமும் ஆச்சரியமும் உண்டாயின. யாரும் அவ்விடத்தில் இருந்து சந்தடி செய்யக்கூடாதென்றும், சாமியார் நிச்சலனமாகப் படுத்திருக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் ஒருகால் கண்டித்துச் சொல்லி ஏதாவது மருந்து கொடுத்துவிட்டு அப்பால் போய் உட்கார்ந்திருப் பார்களோ என்ற சந்தேகம் உதித்தது. விஷயம் அப்படியாக இருந்தால், சிவகாமியம்மாள் அந்தத் தகவலை தங்களுக்கும் தெரிவித்துத் தங்களையும் அப்பால் கூட்டிக்கொண்டு போவதே சகஜமாக நடக்கக்கூடிய காரியமன்றி, தங்களோடு முகங் கொடுத்துக்கூடப் பேசாமலும், தங்களுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமலும் அப்பால் போகவே முகாந்திரம் இல்லை என்ற எண்ணம் அவர்களது மனதில் உதித்தது. உண்மை இன்னதென் பதைத் தெரிந்து கொள்ளாமல் தாம் அவ்விடத்தில் பேசிச் சந்தடி செய்தால், அது சாமியாருக்கு உபத்திரவமாக முடிந்தாலும் முடியலாம் என்ற நினைவும் தோன்றியது ஆகையால், தாங்கள் அப்போது என்ன செய்வதென்பதை அறியாமல் அவர்கள் இருவரும் அசைவற்றுத் தயங்கிச் சிறிது நேரம் அப்படியே