பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

மாயா விநோதப் பரதேசி

இல்லாதவனாகக் காணப்படுகிறான். காலக்கிரமத்தில் அவனது உடம்பு வளர வளர அவனது அறிவு, கல்வி, திறமை முதலியவைகள் எல்லாம் விருத்தி அடைகின்றன. மனிதன் தன் மனைவி மக்கள், சிநேகிதர் முதலியவர்களோடு பழகப்பழக, வயசாக ஆக, ஒவருவருக் கொருவர் ஏற்படும் பாசம், வாத்சல்யம் முதலியவைகள் எல்லாம் அபாரமாகப் பெருகிப் போகின்றன. அதுவுமன்றி, ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு துறையில் அரும்பாடுபட்டுத் தனது ஆயிசு காலம் முழுதையும் செலவிட்டு ஒவ்வொரு விதமான திறமையையோ, பாண்டித்தியத்தையோ, நிபுணத்துவத்தையோ சம்பாதித்துக் கொள்ளுகிறான். நம்முடைய கம்பர், காளிதாசர், திருவள்ளுவர், அவ்வை முதலியவர்கள் எல்லோரும் இறக்கும் போது, அவர்களது அறிவும் குணங்களும் எவ்வளவு பரிபக்குவம் அடைந்திருக்கும். அதுபோல, வீணை முதலிய அரிய வாத்தியங்களில் இரவு பகல் உழன்று அவற்றிலிருந்து தேவாமிருத ஊற்றை உண்டாக்கி மழை போலப் பொழியும் சக்தியை உடையவர்களாக இருந்தோர் எத்தனைபேர். சகலமான நூல்களையும் பரிபூர்ணமாகக் கற்று வாக்கு வன்மையோடு பிரசங்கம் செய்யும் சக்தியை சம்பாதித்துக் கொண்டவர்கள் அநந்தமானவர்கள். அதுபோல சட்ட விவகாரங்களையும் வேதாந்த விவகாரங்களையும் சாஸ்திரங்களையும் கசடறக் கற்று அதிமேதாவிகளாக விளங்கினவர்கள் எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்கள். இப்படி ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு துறையில் மகா அற்புதமான சக்தி வாய்ந்த வர்களாய் மாறி வயசு முதிர்ச்சி அடையும் காலத்தில், எமன் சிறிதும் தாகூடினியமாவது ஈவிரக்கமாவது காட்டாமல், எல்லோரையும் சமமாகக் கொண்டு போகிறதை நாம் பார்க்க வில்லையா? அப்படி ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொண்ட வித்தையோ, அல்லது, நிபுணத்துவமோ, அல்லது அவர்கள் மற்றவர்களிடம் வைத்த பிரியமோ அநியாயமாய் அழிந்து பாழாய்ப் போகின்றனவே என்பதையாவது எமன் எண்ணிப் பார்க்கிறானா? மனிதனும், மனிதருடைய மனசும், அதன் குணங்களும், அவன் சம்பாதித்துக் கொள்ளும் வித்தைகளும், எல்லாம் ஈசுவர சிருஷ்டி ஆகையால், அவைகள் எல்லாம் அழிந்து