பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

287

போகின்றன என்பது சர்வக்ஞனான கடவுளுக்குத் தெரியாமலா இருக்கும். உலகத்தில் உள்ள சகலமான பொருளும் அழிந்து போகிறது போலத் தென்படுகிறதே அன்றி, உண்மையில் எதுவும் அழிகிறதே இல்லை. ஒரு மரம் பிரம்மாண்டமாக வளர்ந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஜீவித்திருந்து கடைசியில் பட்டு வீழ்ந்து நாசமடைந்து விடுகிறது. ஆனால், அந்த மரத்தின் சக்தி முழுதும் அடங்கிய கணக்கில் அடங்காத விதைகளை அந்த மரம் உண்டாக்கி வைத்து விட்டுப் போகிறது. செடியாகி, மரமாகி, கிளைகள் விட்டு, இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், பழங்கள், விதைகள் முதலியவற்றை நிறைத்து அபிவிருத்தியாகக் கூடிய சக்தி முழுதும் ஒர் அற்ப விதைக்குள் அடங்கி இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு மனிதனுடைய ஸாரம் முழுதும் திரண்டு அவனுடைய குழந்தைகளாக உதிக்கின்றன; ஆனால், சிலர் குழந்தைகளையே பெறாதவராய் இறந்து போகிறார்களே, என்ன ஆகிறதென்று நீங்கள் சந்தேகிக்கலாம். அவர்களுடைய உடம்பு மாத்திரம் அழிகிறதே அன்றி, ஜீவாத்மா அழிகிறதே இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத சூட்சும வடிவம் உடையது. அது மறுபடியும் இன்னொருவருடைய வயிற்றில் வந்து ஜனித்துக் குழந்தையாகி மனிதனாகி அபிவிருத்தி அடைகிறது. சில குழந்தைகள் மகா விவேகிகளாகவும், வித்தைகளை வெகு சிக்கிரம் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தந்தையரோ சாதாரண அறிவுடையவராய் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அந்தக் குழந்தைகள் முன் ஜென்மத்தில் அபாரமான அறிவும் நிபுணத்துவமும் வாய்ந்தவராய் இருந்தவர்கள் ஆதலால், மறக்கப்பட்ட பழைய நினைவெல்லாம் உண்டாவது போல, அவர்களுக்கு எல்லாம் சுலபத்தில் வந்துவிடுகிறது. ஆகவே, உலகத்தில் மனிதன் இறப்பதனால், அவனுடைய குணங்கள், அபாரசக்தி, நிபுணத்துவம் முதலியவைகள் எல்லாம் அழிந்து போவதாகவே நாம் எண்ணக்கூடாது. இன்றைக்கு நான் இறந்தால், வெகு சீக்கிரத்தில் நான் இன்னொரு தாய் வயிற்றில் வந்து பிறப்பேன். என்னிடம் இப்போது காணப்படும் குணங்களோ, திறமையோ அப்போதும்