பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

மாயா விநோதப் பரதேசி

அபிவிருத்தி அடைந்து வெளிப்படும். இப்படி நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் இன்னொரு கேள்வி கேட்பீர்கள். நீங்கள் வேறே எங்கேயோ போய்ப் பிறந்தால், அதனால் எங்களுக்கு என்ன லாபம், நாங்கள் உங்களை இழப்பது நிச்சயம் அல்லவா என்று நீங்கள் கேட்பீர்கள். இதற்கு மனிதனுடைய குறுகிய அறிவே உத்தரவாதியன்றி, கடவுள் உத்தரவாதியல்ல. உலகத்தில் காணப்படும் மனிதர் முதல் எறும்பு, பூச்சி, புழுக்கள், மரஞ்செடி கொடிகள் மண் கல் வரையில் உள்ள சகலமான வஸ்துக்களும் கடவுளுடைய பிரதிபிம்பமே அன்றி, ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாத தனித்த வஸ்துக்கள் அல்ல. தண்ணீரையும், காற்றையும், மண்ணில் இருந்து உற்பத்தியாகும் தானியங்களையும் காய்கறிகளையும் நாம் உண்டு நம்முடைய உடம்பை வளர்க்கிறோம். அவைகள் இல்லாவிட்டால், நாம் இறந்து போய்விடுவோம். தண்ணிருக்கும், காற்றுக்கும் ஜீவாதாரமான சம்பந்தம் உண்டென்பது நிச்சயமாக விளங்குகிறது. நமக்கும் காற்றுக்கும், தண்ணீருக்கும் வித்தியாசமே இல்லை. எல்லாம் ஒன்றுக்கொன்று பாந்தவ்வியம் உடையது. மண் தானியமாகி மனிதனுடைய உடம்பாக மாறுகிறது. மனிதன் இறந்த பிறகு அது மடிந்து மறுபடி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. குயவன் எப்படி லாரமான மண்ணை எடுத்துப் பிசைந்து தண்ட சக்கரத்தில் வைத்துச் சுழற்றிச் சுழற்றி பலவிதமான பாண்டங்கள் செய்கிறானோ, அதுபோல பூமியின் ஸாரத்தைக் கடவுளாகிய குயவனுடைய ஆக்ஞாசக்கரம் அழகான புஷ்பங்களாகவும், செடி கொடிகளாகவும், காய்கறிகளாகவும் உற்பத்தி செய்து அவற்றின் ஸாரத்தில் இருந்து மனிதனைப் படைக்கிறது. ஆகவே மனிதன் இரண்டு தரம் வடிகட்டி எடுக்கப்பட்ட மண்ணே அன்றி வேறல்ல. இப்படிப்பட்ட உலகத்தில் உயிர் உள்ளதும் உயிர் இல்லாதது போலத் தோன்றுவதுமான எல்லா ஜெந்துக்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டாவது: ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையது. இந்த உண்மையைக் கடவுள் நிதரிசனமாகக் காட்டிக் கொண்டே இருக்கிறார். மனிதன் அதை உணராமல் தனக்கும் மற்ற ஜெந்துக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், தான்