பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

290

நம்முடைய முன்னோர்கள் உலகம் அநித்தியம் என்றும், கடவுள் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றும், நான், நீ என்ற பேதமே இல்லை என்றும், மனிதர் மண்ணுலகப் பற்றையும் சிற்றின்பப் பாசத்தையும் கூடிய வரையில் குறைத்துக் கொண்டு தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்து, இறப்பு பிறப்பாகிய பெருங்கடலை நீக்கித் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சதாகாலமும் கடவுளைப் பஜித்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட உண்மையான கொள்கைகளை எல்லாம் நம்மவர்கள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து இன்ப துன்பங்களைக் குறைத்துக் கடவுளைத் தியானம் செய்வதையே பொழுது போக்காகவும் மறுமைக்கு ஆஸ்தியாகவும் மதித்து வந்திருக்கிறார்கள். அதற்கு இப்போது பெருத்த பல இடையூறுகள் வந்து சேர்ந்திருக்கின்றன. நம்முடைய தேசத்தில் ஒருவர்பின் ஒருவராக வந்து சேர்ந்திருக்கும் அன்னிய மதத்தினர் ஒவ்வொருவரும் தங்களுடைய கடவுள் வேறு மற்றவருடைய கடவுள் வேறு என்ற கொள்கையைப் பரப்பி விட்டனர். மனிதரில் நான் வேறு நீ வேறு என்ற கொள்கை உண்டாகி மனித சமூகத்தில் விளைத்திருக்கும் தீங்குகளுக்குப் போதாக்குறையாக மகம்மதியரைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, வெள்ளைக்காரரைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, இந்துக்களைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, இன்னும் இது போன்ற எண்ணிறந்த இதர மதஸ்தர்களைப் படைத்துக் காத்து அழிக்கும் தெய்வங்கள் வெவ்வேறு என்ற ஒரு நம்பிக்கையும், என் கடவுள்தான் உண்மையானவர், உன் கடவுள் பொய்யானவர் என்ற வாத தர்க்கங்களும், மதச் சண்டைகளும் ஏராளமாக மலிந்து போய் விட்டன. இத்தனை மதஸ்தர்களுடைய தனித்தனியான கடவுள்களுடைய ராஜ்யங்களும் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை. இது போதாமல், வெள்ளைக் காரர்கள் உலகத்தில் ஏராளமாகப் பொருள் தேடி, பூமியில் மறைந்துள்ள சகலமான சக்திகளையும் ரகசியங்களையும் கண்டுபிடித்து மனிதன் அனுபவிக்கக் கூடிய சுகங்களையும் செளகரியங்களையும் அபாரமாக விருத்தி செய்து, ஒவ்வொரு மனிதனும், எவ்வளவு அதிகமாகப் பொருள் தேட முடியுமோ அவ்வளவையும் தேடி, அவன் எவ்வளவு அதிகமான சுகங்களை