பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

13

தேவபாஷை என்று சொல்லப்படும் நம்முடைய சமஸ்கிருதத்துக்கும் ஜெர்மன் பாஷைக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகையால் அவ்விடத்தில் இருந்து மனிதரை சிரஞ்சீவி ஆக்கும் அமிர்தம் உண்டாவது விந்தையுமல்ல, நம்முடைய முன்னோர்களின் கொள்கைக்கு விரோதமானதும் அல்ல என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

கோபாலசாமி:- ஆம். தடையென்ன அப்படித்தான் நாம் அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். இப்போது நீ சொன்னதில் இருந்து எனக்கு இன்னம் ஒரே ஒரு சந்தேகம் உண்டாகிறது. அது தான் தெளிவுபடவில்லை. நம்முடைய முன்னோர்கள், பாவிகள் இறந்த பிறகு அவர்களுடைய ஜீவாத்மாக்கள் தெற்குத் திசையில் உள்ள எமபட்டணத்திற்குப் போய், அவ்விடத்தில் கோரமான தண்டனை அடைவதாகச் சொல்லி இருக்கிறார்களே. அதை நம்மவர்கள் எப்படிக் கண்டு பிடித்தார்கள்? அந்த ஊர் தெற்குத் திசையில் தான் இருக்கிறது என்று ஏன் சொன்னார்கள்?

கந்தசாமி:- இது தெரியவில்லையா? நம்முடைய தேசத்தைக் காட்டிலும் இன்னம் தெற்கில் எந்தத் தேசம் இருக்கிறது என்று யோசித்துப் பார். ஆப்பிரிக்காக் கண்டம் நம்முடைய தேசத்தை விட அதிக தெற்கில் இருக்கிறதல்லவா. அங்கேயுள்ள நீக்ரோ ஜாதியார் கன்னங்கரேல் என்று விகார ரூபத்தோடு பயங்கரமாக இருக்கிறார்கள் அல்லவா. அவர்களைத்தான் எமன் என்றும் எமகிங்கரர்கள் என்றும் நம்மவர்கள் மதித்தார்கள். அவர்களுள் சிலர் மனிதரையே தின்கிறதாக இந்தக் காலத்திலும் நிச்சயமாகத் தெரிகிறது; மனிதர் அங்கே போவது பெருத்த பயங்கரமான தண்டனை என்று நம்மவர்கள் மதித்தார்கள். ஆகையால், பாவிகளின் ஜீவன் அங்கே போகிறதென்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கேட்டாவது ஜனங்கள் சன்மார்க்கத்தில் ஒழுகட்டும் என்ற நல்ல கருத்தோடு அப்படிச் சொல்லுகிறார்கள் என்றே நாம் கொள்ள வேண்டும்.

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) அப்படியானால், ஆப்பிரிக்காக் கண்டத்தில் எல்லாம் மகா கொடுமையான பயங்கர