பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

மாயா விநோதப் பரதேசி

அனுப்ப வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்றார்.

அவரது சொற்களைக் கேட்ட கண்ணப்பாவும் அவனது மனைவியும் மிகுந்த குழ்ப்பமும் கலக்கமும் அடைந்து இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தனர். பிறகு கண்ணப்பா நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “சுவாமிகளே! இந்த உலகத்தில் நிறைந்துள்ள அக்ஞானம், காமம், குரோதம், மதம், மாற்சரியம், துக்கம் முதலிய சகலவிதமான துன்பங்களையும் போக்கி, இதை சன்மார்க்கமே நிறைந்த உலகமாக்குவதற்குத் தாங்கள் சொல்லுவது நல்ல சிறந்த யுக்தி தான். இந்த யுக்தி நமக்கே தெரியும் போது, நம்மைப் படைத்த கடவுளுக்குத் தெரியாமலா போய்விடும். அப்படி இருந்தும் கடவுள் அம்மாதிரியான உபாயத்தைத் தேடாமல் இந்த உலகம் இதே நிலையில் இருந்து வரும்படி விட்டிருக்கிறார் ஆகையால், ஏற்கெனவே இருக்கும் நிலைமைக்குத் தகுந்தபடி தான் நாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உலகத்தை அடியோடு சன்மார்க்கத்தில் திருப்பும் சக்தி தங்களிடத்தில் இல்லை என்று நினைத்து, அதற்காகத் தாங்கள் தங்களுடைய உயிரை விட்டுவிட நினைப்பதால், எங்களைப் போன்றவருக்கு உள்ளதும் போய்விடும் அல்லவா. அக்கிரமங்களும், துன்பங்களும், துயரங்களும், நிறைந்த இந்த உலகத்தில் தங்களைப் போன்ற மகான்கள் அப்போதைக்கப்போது தோன்றி, நல்வழி காட்டிப் போகாவிட்டால், இது அடியோடு கெட்டு நாசமடைந்து விடும் அல்லவா. ஆதிகாலந்தொட்டே உலகத்தில் இப்படித்தான் பெரியவர்கள் தோன்றி ஒவ்வொரு வகையில் அரிய செய்கை களை முடித்து உலகத்திற்கு உபகாரம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதற்கினங்கவே தாங்களும் உதித்திருக்கிறீர்கள். தங்களுடைய பெருமையும், அருமையும், மதிப்பும் தங்களுக்கு உள்ளபடி தோன்றாமல் அற்பமாகத் தோன்றினாலும் எங்களுக்கெல்லாம் அவை விலை மதிப்பற்றவையாகவே தோன்றுகின்றன. கிடைக்கக்கூடாத ஏதோ ஒர் அபாரமான விஷயத்தை எதிர்பார்த்து, ஏற்கெனவே உள்ள அரிய பொருளை இழந்துவிட எங்களுடைய மனம் இடம் தரவில்லை. அதுவுமன்றி, பாம்பு கடியானது தாங்கள் நினைப்பது போல மனிதரால் தடுக்கமுடியாத சம்பவமல்ல. தாங்கள் உத்தரவு