பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

மாயா விநோதப் பரதேசி

அவனை உள்ளே அழைத்து வரும்படி என்னுடைய ஜெவானை அனுப்பினேன். அவன் வெளியில் போய்ப் பார்த்தால் கும்பகோணத்திலிருந்து வந்தவன் காணப்படவில்லை. அவன் போய்விட்டதாக என் ஜெவான் வந்து செய்தி சொன்னான். அதைக் கேட்க, என் மனசில் ஏதோ ஒருவித சந்தேகம் தோன்றத் தொடங்கியது. சூபரின்டெண் டென்டின் இடத்திலிருந்து வந்த மனிதன் நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கேட்டுக் கொண்டே போவான். அல்லது, தான் போவதாகவாவது செய்தி சொல்லி அனுப்பிவிட்டுப் போவான். அப்படிச் சொல்லாமல், அந்த மனிதன் போனதிலிருந்து என் மனசில் ஏதோ சந்தேகம் தோன்றிக் கொண்டே இருந்தது. உடனே நான் என் ஜெவானை வெளியில் அனுப்பிவிட்டு, சூப்பரின்டெண்டெண்டின் கடிதத்தை எடுத்துப் படித்தேன். அவர் கும்பகோணத்தில் முகாம் செய்திருப்பதாகவும், அவ்விடத்தில் சட்டைநாத பிள்ளையின் சில உடைகளும், அவற்றிலிருந்த கடிதங்களும், மற்றும் பல சாமான்களும் அகப்பட்டதாகவும், அவைகளை அந்தப் பெட்டிக்குள் வைத்து அனுப்பி இருப்பதாகவும், அவைகளை ஆராய்ச்சி செய்து, சட்டைநாத பிள்ளை ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கும் விஷயத்தில் யோசனை சொல்ல வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதி இருந்தார். அதுவுமன்றி, இது நிரம்பவும் ரகசியமான விஷயம் ஆகையால் பெட்டிக்குள் இருக்கும் சாமான்களை மற்றவருக்குக் காட்டாமல் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது. போலீஸ் இலாகாவில் எல்லாவற்றையும் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளுகிறது வழக்கம்; அதுவுமன்றி, நானே எல்லா விஷயங்களிலும் அதிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுகிறவன் என்று சூப்பரின்டெண்டெண்டு பல தடவைகளில் என்னிடம் நேரில் சொல்லி இருக்கிறதன்றி, அவர் அதற்குமுன் எந்த விஷயத்திலும் எனக்கு ஜாக்கிரதை சொல்லியதே இல்லை. ஆகவே, அவர் இந்த மாதிரி எழுதியதும் எனக்குப் புதுமையாக இருந்தது.

கண்ணப்பா:- ஆகா! தங்களுடைய புத்தி விசேஷத்தை என்னவென்று சொல்லுகிறது! நாங்களாக இருந்தால், முன்பின் யோசியாமல் அவசரப்பட்டு அந்தப் பெட்டியை உடனே திறந்து பார்த்திருப்போம். தாங்கள் அற்ப விஷயங்களைக் கொண்டு