பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

மாயா விநோதப் பரதேசி

நினைக்கிறேன். நான் என்ன செய்தேன் என்றால், உடனே கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஓர் அவசரத் தந்தி அனுப்பி, போலீஸ் சூபரின்டெண்டெண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறாரா என்று கேட்டேன். அங்கிருந்து உடனே மறுதந்தி வந்தது. சூப்பரின்டெண்டெண்டு அங்கே வரவே இல்லை என்றும், பட்டுக்கோட்டைத் தாலுக்காவில் முகாம் செய்து கொண்டிருப்பதாக நேற்று சாயுங்கால வண்டியில் தஞ்சாவூரில் இருந்து வந்த ஒரு ஜெவான் சொல்லுகிறான் என்றும், அந்தத் தந்தியில் தகவல் காணப்பட்டது. பெட்டியோடு வந்த கடிதத்தை நான் மறுபடியும் எடுத்துப் படித்தேன். அதில் இன்றைய தேதியும் கும்பகோண்ம் முகாம் என்ற தகவலும் காணப்பட்டன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டன. ஆதலால், என் மனசில் உடனே பெருத்த சந்தேகம் உண்டாகிவிட்டது. பெட்டியில் ஏதோ கெடுதல் இருக்கிறதென்றும், கடிதத்தை யாரோ பொய்யாகத் தயாரித்து அனுப்பி இருக்க வேண்டும் என்றும் நான் யூகித்துக் கொண்டேன். அவைகளைக் கொண்டு வந்தவன் தஞ்சாவூர் முதலிய வேறே எந்த ஊரிலாவது இருந்து போலீஸ் சூப்பரின்டெண்டெண்டு அனுப்பியதாகச் சொல்லாமல், கும்பகோணத்தில் இருந்து அனுப்பியதாகச் சொன்னதைக் கொண்டும், பெட்டியில் வேறே ஏதாவது வழக்கைப் பற்றிய பொருள்கள் இருப்பதாகச் சொல்லாமல், சட்டைநாத பிள்ளையின் உடை முதலியவைகள் இருப்பதாகச் சொன்னதைக் கொண்டும் கும்பகோணத்தில் உள்ள சட்டைநாத பிள்ளையைச் சேர்ந்த மனிதர்தான், என் மேலுள்ள ஆத்திரத்தினால் ஏதோ தந்திரம் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் தோன்றியது. சட்டைநாத பிள்ளையும் அவனுடைய தம்பியும் என்மேல் தீராப்பகைமை வைத்திருப்பது இயற்கை அல்லவா; அதுவுமல்லாமல் நான் எப்படியும் பிரயாசைப்பட்டு, சட்டைநாத பிள்ளை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவனை மறுபடி சிறைச்சாலைக்கு அனுப்பி விடுவேன் என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம் ஆகையால், எப்படியாவது என்னை ஒழித்து விட்டால், அதன் பிற்கு மற்றவர்களை எளிதில் சரிப்படுத்திவிட்டு எங்கேயாவது மறைந்து கொண்டு இருக்கலாம் என்ற நினைவோடு, அவர்கள் முதலில் என்னைக் கொன்றுவிட எண்ணுவதும் சகஜமே ஆகையால், அவர்கள் எனக்கு ஏதாவது