பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

311

கண்ணப்பா:- வடிவூ! நீ இதற்குள் அவசரப்படுகிறாயே! சுவாமிகள் அவர்களுடைய யோசனை முழுவதையும் நன்றாக வெளியிடுவதற்குள், அரைகுறையாகத் தெரிந்துகொண்டு ஏன் அவஸ்தைப்படுகிறாய்? இறந்து போய்விட்டது போல பாவனை காட்டி, கொஞ்ச காலம் மறைந்திருக்க வேண்டும் என்று தாம் உத்தேசித்திருப்பதாக அல்லவா சொன்னார்கள். இவர்களை நாம் வைத்துக் கொளுத்தி விட்டால், அதன் பிறகு எப்படிப் பிழைத்து வர முடியும்? ஒருவேளை இப்படி இருக்கலாம். இரவில் நாம் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுகிற பாடையில் ஒருவேளை இவர்கள் படுத்துக் கொண்டு இறந்து போனது போலக் காட்டிக் கொண்டு, மயானம் போன பிறகு, தோட்டிகளை அப்பால் போகச் சொல்லிவிட்டு, இவர்கள் எழுந்திருந்து போய்விடலாம் என்ற உத்தேசம் இருக்கலாம். மற்ற மனிதர்கள் யாரும் கூட வரப்போகிறதில்லை அல்லவா?

வடிவாம்பாள்:- அப்படிப்பட்ட துணிகரமான வேலை செய்வது நல்லதல்ல. நாம் பாடையை எடுத்துக் கொண்டு போகும் போது மனிதர்கள் யாராவது விழித்துக் கொண்டு நம்மோடுகூடத் தொடர்ந்து வந்தால், நாம் அவர்களைத் தடுக்க முடியுமா? அப்படி வருகிறவர்களுக்கு எதிரில் இவர்கள் எழுந்து போக முடியாமல் போய்விடும் அல்லவா.

சாமியார்:- (அன்போடு புன்னகை செய்து) நான் உங்கள் இருவருடைய சந்தேகங்களை எல்லாம் தீர்ப்பதற்கு முன் நீங்கள் இருவரும் ஒரு காரியம் செய்யுங்கள். இதோ வலது பக்கத்தில் ஒரு கதவு தெரிகிறதல்லவா. அதன் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு, உள்ளே போங்கள். அவ்விடத்தில் மெத்தைப் படிக்கட்டு இருக்கிறது. அப்படியே மேலே ஏறி எதிரில் இருக்கும் அறைக்குப் போய்விட்டுத் திரும்பி வாருங்கள். அதன் பிறகு நான் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறேன்” என்றார்.

உடனே கண்ணப்பாவும் வடிவாம்பாளும் அவ்விடத்தை விட்டு அவர் குறித்த கதவைத் திறந்து கொண்டு அப்பால் சென்றனர். அப்புறத்தில் அவர் கூறியது போல மேன்மாடப் படிக்கட்டு ஒன்று காணப்பட்டது. அதன் வழியாக அவர்கள் இருவரும் மேலே ஏறிச் சென்றனர். படிக்கட்டு முடிந்த உடனே எதிரில் ஒர் அறை காணப்பட்டது. அந்த அறை ஒரு சயனக்கிரகம்