பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

17

நின்று கொண்டிருக்கலாம் என்று நீ சொல்வது சரியாக இருக்கிறதா? யோசித்துப் பார். அது நிஜமாக இருக்காது. நீ சொல்லும் இன்னொரு யூகம் சரியானதாக இருக்கலாம். அவர் தமக்கு அருமையான மனிதர் அதற்குள் இருப்பதைக் கருதியோ, அல்லது, இருப்பதாக எண்ணி மனக்கோட்டை கட்டியோ அப்படி நின்றிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை அவருடைய சம்சாரம் கைம்பெண்ணாய் அதற்குள் இருக்கிறாளோ என்னவோ - என்று கூறிக் கலகலவென்று நகைத்தான்.

அதைக் கேட்ட கந்தசாமியும் தன்னைமீறி களிகொண்டு கைகொட்டி “பலே! பலே!” என்று கூறிச் சிரித்தான்.

அவ்வாறு அவர்கள் இருவரும் சம்பாவித்துக் கொண்டிருந்த சமயத்தில், சந்திரன் மேலே உயர்ந்து கொண்டே இருந்தது. நிலவின் பிரகாசமும் இனிமையும் அதிகரித்துத் தோன்றின. பால் போன்ற வெண்ணிறமான நிலவு உலகில் உள்ள சகலமான பொருட்களின் மீதும் ஆநந்தமாகத் தவழ்ந்து கொஞ்சி விளையாடி அமிர்த ஊற்றால் அபிஷேகம் செய்தது. சந்திரனைக் கண்டு முன்னிலும் கோடிமடங்கு அதிகரித்த களிவெறியும் மூர்க்கமும் அடைந்த அலைகள் தலைகுப்புறக் கரணமடித்து உருண்டு புரண்டு ஒடித்திரும்பி ஒன்றன்மேல் ஒன்று மோதி பலின் விளையாட்டு நடத்தின. ஆகாய வட்டமும், அதில் மலர்ந்து தோன்றிய நட்சத்திரச் சுடர்களும், வைரங்கள் இழைத்த ஊதா வெல்வெட்டுக் குடை விரிக்கப்பட்டது போல மகா வசீகரமாகத் தோன்றின. கடற்கரையை அடுத்த சாலையில் அடுத்தடுத்து வெகுதூரம் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த காட்சி கடலாகிய பூமாதேவியின் கேசத்தைச் சுற்றிலும் அணியப்பெற்ற முத்துமாலை போல இருந்தது. தென்றல் காற்று முன்னிலும் அதிக இனிமை உடையதாகக் கனிந்து வீசி சகல ஜீவராசிகளுக்கும் ஆநந்தத் தாலாட்டுப் பாடிப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தகைய நிகரற்ற ரமணியக் காட்சியில் லயித்துப் போய் மெய்ம்மறந்து பூரித்துப் படுத்திருந்த கந்தசாமி பலமுறை நெடுமூச் செறிந்து, “ஆகா! இந்த இடம் எவ்வளவு பிரம்மாநந்தமாக

மா.வி.ப. I-3