பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மாயா விநோதப் பரதேசி

இருக்கிறதப்பா இதே இடத்துக்கு நாம் பகல் பன்னிரண்டு மணி வேளைக்கு வந்திருந்தால், இந்த மணலில் நாம் காலை வைத்து உயிர் பிழைத்துத் திரும்பிப் போக முடியுமா? நெருப்பில் விழுந்த சருகு போல, கால் அப்படியே கருகிப்போய் நரகவேதனை உண்டாகிவிடுமே. அந்தச் சமயத்தில் மனிதர்கள் எவ்வளவு தான் பிரயாசைப்பட்டாலும், அந்தக் கொடுமையைக் கொஞ்சமாவது மாற்ற முடியமா? இப்போது நாம் அனுபவிக்கும் பிரம்மாநந்த சுகத்தில் ஓர் அணுவிலும் பரம அனுப்பிரமாணம் நம்மால் உண்டாக்கிக் கொள்ள முடியுமா? கடவுளுடைய மகிமையை என்னவென்று புகழுகிறது ஓர் இமைகொட்டும் நேரத்தில், கடவுள் தமது மந்திரக்கோலை ஆட்டினால் அண்டாண்ட பிரம்மாண்டங்கள் எல்லாம் தலை தடுமாறிப் போகின்றன பார்த்தாயா? ஒரு நொடியில் உலகம் முழுதையும் சுட்டெரித்து விடுகிறார். அடுத்த கூடிணத்தில் ஒரு மழை பெய்ததானால் எங்கு பார்த்தாலும் ஒரே ஜலப்பிரவாகமாகி விடுகிறது. இப்போது பார். கொஞ்ச நேரத்துக்கு முன் நெருப்புப் பொறி பறந்த இந்த உலகம் முழுதும் இப்போது அமிர்தசாகரத்தில் ஆழ்ந்து மிதந்து கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, தங்கள் ஆயிசு காலம் முழுதும் உழைத்துத் தண்ணீரை எடுத்துக் கொட்டினால்கூட, இப்படிப்பட்ட அற்புதமான மாறுபாட்டைச் செய்ய முடியுமா? அபாரசக்தி வாய்ந்த அகண்டாதிதனான பரமாத்மாவின் ஆக்ஞாசக்கரம் எப்படி நடைபெற்று வருகிறது பார்த்தாயா! உயிரில்லாத ஜடவஸ்துக்கள் என்று நாம் கருதும் பூமி, சந்திரன், சூரியன், கடல், மேகம், தண்ணி, பர்வதங்கள் முதலியவை அதனதன் ஒழுங்கில் நின்று, கட்டுப்பாட்டுக்கு அடங்கி, எப்படி நடக்கின்றன பார்த்தாயா? கடல் இவ்வளவு பெரியதாக இருக்கிறதே. இதற்கு ஏதாவது கரை இருக்கிறதா? இந்தக் கடல் பக்கம் கொஞ்சம் உயர்ந்தால் உலகில் உள்ள ஜீவராசிகளின் கதி எல்லாம் என்னவாகும் பார்த்தாயா? ஈசுவரனுடைய மகிமையையும், அவனுடைய சிருஷ்டியின் லீலாவிநோதத்தையும் எண்ணிப் பார்க்கப் பார்க்க, எல்லாவற்றிலும் மேலான பதவி என்று நாம் பாராட்டிப் புகழும் இந்த மனித ஜென்மம் கடவுளின் சிருஷ்டியில் ஓர் அற்பமான