பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

19

தூசிக்குக்கூட உவமை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட பரம அற்பர்களான மனிதருக்கு தாம் என்ற ஆணவமும், ஆசாபாசங்களும் எவ்வளவு அபாரமாக இருக்கின்றன பார்த்தாயா? இவ்வளவு பிரம்மாண்டமான சிருஷ்டியை நடத்தி சகல ஜீவராசிகளையும் காத்து அழித்து மறுபடி மறுபடி நிர்மானம் செய்து, திரை மறைவில் நின்று நடர்களை ஆட்டி வைக்கும் சூத்திரதாரி போல தோன்றியும் தோன்றாமலும் நிற்கும் சர்வேசுவரன் ஒருவன் இருக்கிறான் என்பதையும், அவன் நமது செயல்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும், அவனுடைய கண் திருஷ்டிக்கு எதுவும் மறைவானதில்லை என்பதையும் கொஞ்சமும் நினையாமல் மனிதரில் படித்தவரும் படிக்காதவருமான பெரும்பாலோர் அக்ஞான இருளில் மூழ்கி, ஏராளமான பணத்தைத் தேடுவதிலேயே தமது ஆயுள்காலம் முழுதையும் போக்கி, அந்த வேலையைச் செய்வதற்காகவே தாம் ஜென்மம் எடுத்திருப்பதாக எண்ணிக் கொண்டு புரட்டிலும், மோசத்திலும் இறங்கிக் கெட்டலைந்து உழன்று கடைசிவரையில் உண்மை ஞானம் பெறாமல் இருந்தே வீணர்களாய் மடிகிறார்களே! இது என்ன அநியாயக் கொள்ளை பார்த்தாயா? செல்வம் என்பது கடவுளுடைய அகண்ட சிருஷ்டியில் மகா அற்பமானது. அது இன்றைக்கு ஒருவனிடத்தில் இருக்கிறது; நாளைக்கு இன்னொருவன் இடத்திற்குப் போகிறது. ஒருவன் தனது ஆயிசுகாலம் முடியத் தனது மனத்தையும் உடம்பையும் வதைத்துப் பலரிடம் உள்ள பொருள்களை எல்லாம் தேடி ஒரிடத்தில் சேர்த்து வைக்கிறான். அதற்குள் அவனது ஆயிசு முடிகிறது. அவன் இறந்து போகிறான். அதன் பிறகு அவனுடைய பிள்ளை வருகிறான். அதைத் தேடிச் சேர்த்ததில் எவ்வளவு உழைப்பு ஏற்பட்டதென்பது அவனுக்குத் தெரியாது ஆகையால், அவன் அவ்வளவு பொருளையும் வெகு சீக்கிரமாகச் செலவு செய்து, அது மறுபடி பிரிந்து பலரிடத்துக்குப் போகும்படி செய்துவிடுகிறான். இப்படி ஒரிடத்தில் இருக்கும் வெள்ளியையும் பொன்னையும் இன்னோரிடத்திற்கு மாற்றிக் கொண்டே இருப்பதற்காகவா, கடவுள் இந்த மனித