பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

27

காரணத்தினாலேயே அவளிடம் எல்லா நலன்களும் அவசியம் இருக்கும் என்று நிச்சயித்துக் கொள்ளலாமா? நீ பார்க்கா விட்டாலும், உன் தகப்பனார், தமயனார் முதலிய யாராவது ஒருவர் பார்க்க வேண்டாமா? நான் இப்படிப் பேசுவதைப் பற்றி, நீ என்மேல் ஆயாசப்பட்டாலும், பாதகமில்லை. நான் உன்னுடைய கூேடிமத்தைக் கருதியே பேசுகிறேன். அதுவுமன்றி, பெண்ணுக்குத் தாய்கூட இல்லை என்று கடிதத்தில் எழுதி இருக்கிறார்களே. தாயில்லா பெண்ணைக் கட்டினால், நீ அவர்களுடைய வீட்டுக்குப் போனால் அன்பாக உன்னை உபசரிப்பதற்கு வேறே யார் இருக்கிறார்கள்? இந்த எண்ணமெல்லாம் உன் மனசில் உண்டாகவில்லையா? ஏதடா இவன் அபசகுனம் போலக் குறுக்கிட்டு இப்படிப் பேசுகிறானே என்று நீ நினைத்தாலும் நினைக்கலாம். அல்லது, பெண்ணின் பெருமையை நான் குறைவு படுத்திப் பேசுகிறதாகவும் நீ எண்ணலாம். இருந்தாலும், பாதகமில்லை” என்றான்.

அதைக் கேட்டவுடனே கந்தசாமி சிறிது யோசனை செய்தபின் மறுபடி பேசத்தொடங்கி, “என்னடா, கோபாலசாமி! நீ கூட யோசனை இல்லாமல் பேசுகிறாயே! இந்தக் காலத்தில், அதுவும் வெள்ளைக்காரருடைய நடையுடை பாவனைகளை அனுசரித்து நடக்கும் நம்முடைய தேசத்துப் பெரிய மனிதர் வீட்டில், சாதாரண மனிதர்களுடைய வீட்டில் நடப்பது போல மாமியார் முதலியோர் வந்து மாப்பிள்ளைக்கு உபசாரம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறாயா? இவர்கள் வீட்டில் சமையலுக்கு எட்டுப் பரிசாரகர்கள் இருப்பார்கள். மற்ற குற்றேவல்களைச் செய்வதற்குப் பத்து வேலைக்காரர்கள் இருப்பார்கள். நமக்கு வேண்டிய விருந்து முதலிய காரியங்களை எல்லாம் அவர்களே செய்து விடுவார்கள். மாமியார் இருப்பதும் ஒன்று தான்; இல்லாமல் போவதும் ஒன்று தான். இந்தக் காலத்தில் பணம் அதிகமாக இருந்தால் எல்லா விஷயங்களும் இயந்திர சக்தி போல சொந்த மனிதருடைய உதவி இல்லாமல் தானாகவே நடைபெறுகின்றன. சாதாரண ஜனங் களுடைய வீட்டில் மருமகப்பிள்ளை வந்து விட்டால், மாமியார் முதலிய பிரபலஸ்தர்கள் பிரியமாகிய பெரிய சக்தியினால் தூண்டப்பட்டு