பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மாயா விநோதப் பரதேசி

அரும்பாடுபட்டு விருந்து சிற்றுண்டி முதலியவற்றைத் தயாரித்துத் தாங்களே சுதாவில் பரிமாறி அன்பாகிய அமிர்தத்தை மழை போலப் பொழிவார்கள். அந்த இடத்தில் இருப்பது சுவர்க்கலோகத்தில் இருப்பது போல இருக்கும். அதனால் ஒருவரிடத்தில் ஒருவருக்கு வேரூன்றிய வாஞ்சையும் பாசமும் சுரந்து நிலைநிற்கும். எல்லா உபசரணைகளையும் வேலைக்காரர்களே செய்து விடுவார்களானால், மாமியார் முதலிய நெருங்கின பந்துக்களுடைய நற்குணங்களும், அந்தரங்க அபிமானமும் வெளிப்பட அவகாசம் இல்லாமல் போய் விடுகிறது. மனிதர் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகச் செய்து கொள்ளும் சிறிய சிறிய காரியங்களினாலே தான், பாந்தவ்வியத்தையும் அன்பையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரிய மனிதருடைய வீட்டில், அந்த முக்கியமான அம்சம் தான் முழுப் பூஜ்ஜியமாக இருக்கிறது. அப்படி இருக்க, மாமியார் இருப்பதும் ஒன்று தான்; இல்லாததும் ஒன்று தான். பெண் தாய் இல்லாதவள் ஆயிற்றே என்ற கவலையையே நாம் கொள்ள வேண்டுவதில்லை.

கோபாலசாமி:- வாஸ்தவமான பேச்சு. நீ சொல்வது மாமியாரை மாத்திரம் பொருத்த வார்த்தையல்ல. புது நாகரிகப் பிரபுக்கள் வீட்டிற்கு நன்றாகப் படித்து பி.ஏ., எம்.ஏ. பட்டம் பெற்ற பெண்களும் சரி, அவ்விடத்திலும், எல்லா வேலைகளையும், சமையலையும் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள வேலைக்காரிகளும், வேலைக்காரர்களும் சகலமான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வதால், நாட்டுப் பெண்களுக்கு ஒரு வேலையும் இல்லாமல் போகிறது. அவர்கள் நன்றாக உண்டு உடுத்து, நவராத்திரிக் கொலுப் பொம்மைகள் போல, சோம்பேறிகளாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனசுக்கும் உடம்புக்கும் எவ்வித வேலையும் இல்லாமல் மலினம் ஏற்படுகிறது. புருஷன் பெண்ஜாதி என்றால், நீ மாமியார் விஷயத்தில் சொன்னது போல, பத்தி புருஷனுடைய சுக செளகரியங்களைத் தானே நேரில் கவனித்து, அவனுக்குரிய ஆகாராதி தேவைகளை எல்லாம் அன்புடன் கலந்து அளித்து, அவனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் நிறைவேற்றி, இரண்டு