பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மாயா விநோதப் பரதேசி

சிற்றின்ப நோக்கம் ஒன்றே அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும். வயசு முதிர முதிர, ஒருவருக் கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல், ஒருவருக்கொருவர் பெரும் பாரமாக ஆகிவிடுவார்கள் என்பது நிச்சயம். வெள்ளைக்காரர்கள் ஸ்திரிகளைச் சம அந்தஸ்து உடையவர்களாக ஆக்குவதாகச் சொல்லி, அவர்கள் படும்பாடு யாரும் படமாட்டார்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்கள் நம்மைவிட அதிக புத்திசாலிகளாக இருக்கலாம். ஸ்திரி புருஷ சம்பந்தத்தில் மாத்திரம், நம்முடைய ஏற்பாட்டுக்கு இணையான சிறந்த ஏற்பாடு இந்த உலகத்தில் எங்குமில்லை என்பது நிச்சயம். பணிவு, அடக்கம், சுத்தமான நடத்தை, உழைப்புக் குணம் முதலியவற்றைக் கண்டால் எவருக்கும் சந்தோஷமும், வாத்சல்யமும் உண்டாகாமல் இருக்காது. வெள்ளைக்காரர்கள் பெண்களுக்குச் சமத்துவம் கொடுத்திருப்பதாக காகிதத்திலும், வெளிவேஷத்திலும் எவ்வளவு தான் சொல்லிக் கொண்டு திரிந்தாலும், அவர்களும், பணிவு, அடக்கம், உழைப்புக் குணம், கற்பு முதலிய குணங்கள் வாய்ந்த மனைவிகளைத் தங்கள் குல தெய்வம் போல வைத்துக் கண்மணிகளை இமைகள் காப்பது போலப் பாதுகாத்துத் தமது உயிரையே அவர் மீது வைக்கிறார்கள். அப்படிப்பட்ட குணம் இல்லா விட்டால், அவர்களுக்குள்ளும் ஒயாப் போராட்டமாகத் தான் இருக்கிறது. அடிக்கடி நியாயஸ்தலங்களில் கலியான விடுதலைக்காக எத்தனையோ விபரீதமான வழக்குகள் ஆயிரக்கணக்கில் வருவதை நாம் பார்க்கவில்லையா. சாதாரணமாக நாம் நம் தேசத்துக்கு வந்துள்ள வெள்ளைக்காரரை எடுத்துக் கொள்வோம். ஊரில் உள்ள மற்ற ஜனங்களுக் கெல்லாம் அவர்கள் தங்கள் நாய்க்குக் கொடுக்கிற மரியாதைகூடக் கொடுக்கிறதில்லை. தங்களிடம் பணிவாக வேலை செய்யும் பறையர்களான பொட்லர் முதலியவர்களுடைய உழைப்புக் குணம், பணிவு முதலியவற்றைக் கண்டு அவர்களிடம் அளவற்ற பிரியம் வைத்து அவர்களுக்குக் கனகாபிஷேகம் செய்கிறார்கள், எத்தனையோ துரைமார்கள் தங்களிடம் பணிவாக இருப்பவர்களுக்குப் பெருத்த உத்தியோகங்கள் கொடுப்பதையும், சிலர் தங்களுடைய