பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மாயாவிநோதப் பரதேசி

அடைய வேண்டும் என்ற ஒரு பேராவல், பெருத்த அக்கினி போல எழுந்து நம் மனசில் தகித்துக் கொண்டிருக்கும். கடவுளுக்கு ஆராதனம், அபிஷேகம் முதலியவற்றை நம் பெரியோர்கள் நடத்தும் போது, அது ஒரு சிறிய கல் என்பதை மறந்து, அதை அகண்டாகாரமான பரமாத்மா என்று மனதில் பாவித்து அவருக்கு நாம் பணிவிடைகள் செய்வதாக எண்ணிக்கொள்ள வேண்டும் என ஆராதனக் கிரமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, மனிதருடைய மனசில் உள்ள அன்பைப் பெருக்கவும் மற்றவரின் பிரியத்தைக் கவரவும் வேண்டுமானால், ஒவ்வொருவரும் அன்பான வார்த்தைகளாலும், வெளிப்படையான உபசரணைகளாலும், அதைச் சாதித்துக் கொள்ள வேண்டும். கடவுளிடத்தில் மனிதர் எப்படி நடந்து கொள்ளுகிறார்களோ, அதுபோல பதி பத்திமார் ஒருவரிடத் தொருவர் நடந்து கொள்ள வேண்டும். புருஷர்கள் திடசாலிகளாகவும், பலவீனர்களான தம்முடைய மனைவியரைச் சகல விதத்திலும் காப்பாற்றக் கூடியவர்களாகவும் இருப்பதாலும், அவர்களின்றி, ஸ்திரிகளுக்கு வேறே புகலிடம் இல்லை ஆகையாலும், முக்கியமாக ஸ்திரீகள் தாம் படித்தவர்கள் என்பதையும், பணக்காரர் வீட்டுப் பெண்கள் என்பதையும் அடியோடு மறந்து, புருஷனுக்குரிய பணிவிடைகளை எல்லாம் தாமே ஏற்றுக்கொண்டு தமது அன்பை வெளிப்படுத்தியும் பெருக்கியும், அதனால் புருஷருடைய அந்தரங்கமான காதலை வளர்த்தும் இல்லறம் நடத்துவதே இருவர்க்கும் சுகிர்தமான விஷயம். அது தேகத்துக்கு ஆரோக்கியத்தையும், மனசுக்கு ஆநந்தத்தையும் உண்டாக்கும். அதைவிட்டு, சுகமாக உண்டு உடுத்து ஓய்ந்து உட்கார்ந்திருப்பதே சுகம் என்று நினைப்பது போலி இன்பமே. வெகு சீக்கிரத்தில் அது கணக்கில்லாத பல அநர்த்தங்களை விளைவிப்பது திண்ணம்.

கந்தசாமி:- (சிறிது ஆழ்ந்து யோசனை செய்து) வாஸ்தவமான சங்கதி. ஆனால், நியும் நானும் சொல்வதை யார் கேட்கப்போகிறார்கள். இந்த உத்தியோகங்கள் ஏற்படுவதற்கு முன் பெண்கள் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, வெளி ஊர்களில் லட்சப் பிரபுக்களும், பெருத்த