பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

35

அவசியம்; சாதாரணமாக இல்லறம் நடத்தி புருஷருக்கு உகந்த பதிவிரதா சிரோன்மணிகளாக விளங்கி கூேடிமமாக இருக்கப் பிரியப்படும் பெண்களுக்கு இந்தப் பட்டங்கள் கெடுதலாகவே முடிகின்றன. இப்படிப்பட்ட பட்டம் பெறும் ஸ்திரீகள் ஒரு புருஷனையும் மணக்காமல் சுய அதிகாரியாக இருந்து உத்தியோகங்கள் பார்ப்பதே சிலாக்கியமானது. சாதாரணமாக இல்லறம் நடத்தப் பிரியப்படும் பெண்கள் பெரிய மனிதருடைய பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழைகளுடைய பெண்ணாக இருந்தாலும் சரி, தாங்கள் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மாத்திரம் தெரிந்து கொண்டு குடும்ப விவகாரங்களை நடத்தும் திறமையோடு மாத்திரம் இருந்தால், அதுவே எதேஷ்டமானது. இந்த விஷயத்தில் நம்முடைய துரைத் தனத்தார் சரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஸ்திரீகளின் படிப்பை அவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். ஆண் பிள்ளைகளைப் போல பட்டங்கள் பெற்று உத்தியோகம் வகிக்க ஆசைப்படுவோருக்குத் தகுந்த படிப்பை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்டவர் சொற்பமாகத் தான் இருப்பார்கள். மற்ற பெண்களுக்குக் கற்பிக்கும் கல்விக்கு பி.ஏ., எம்.ஏ., முதலிய பட்டங்கள் ஏற்படுத்தக் கூடாது. சாதாரணமாக ஒரு குடும்பத்தை நடத்தும் விஷயத்தில் ஸ்திரீகள் சமையல் செய்வது, சிக்கனமாகச் செலவு செய்வது, புருஷன் குழந்தைகள் தாங்கள் முதலிய எல்லோருடைய தேகத்தையும் வீட்டையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் முறை, மருத்துவம், முதலிய இன்றியமையாத விஷயங்களை அவர்களுக்கும் போதிக்க வேண்டும். அதுவுமன்றி, அவர்கள் நன்றாக உழைத்துப் பாடுபட்டு வேலை செய்ய வேண்டும் என்றும், புருஷரிடமும், மாமனார் மாமியாரிடமும், அன்னியரிடமும், குழந்தைகளிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க முறைகளையும் நன்றாகப் போதிக்க வேண்டும். முக்கியமாக அடக்கம், கற்பு, உழைப்புடைமை முதலிய குணங்கள் பெண்களுக்கு அவசியம் ஏற்படும்படியான முறைகளை அனுசரிக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்வி பயிற்றினால் தான், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒற்றுமை,