பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

41

பணிவு, முதலிய நற்குணங்கள் உடையவளா என்பதை நாம் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

கோபாலசாமி:- என்ன அப்பா, கந்தசாமி! நீ பேசுகிறது நிரம்பவும் அக்கிரமமாகவும் கர்னாடகமாகவும் இருக்கிறதே! வெள்ளைக்காரருடைய நாகரிகம் பரவிவரும் இந்தக் காலத்தில் கூட நீ சம்சாரம் இப்படி அடிமை போல நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அது நிறைவேறுமா? பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் கோஷிக்கும் இந்தக் காலத்தில் நீ இப்படிப் பேசலாமா? அதுவுமன்றி, பெண் பி.ஏ., பரிட்சையில் தேறி வரப் போகிறாள். கலெக்டருடைய பெண் உனக்குப் படிந்து நடக்க வேண்டுமானால், அது எப்படி சாத்தியம் ஆகும்.

கந்தசாமி:- மற்றவர்கள் எப்படியாவது சொல்லிக் கொண்டு திரியட்டும். அது எனக்கு அக்கறை இல்லை. கலியானம் செய்து கொள்வதெல்லாம், பெண்வடிவமான ஒரு எஜமானரை நாம் தேடிக் கொள்வதென்று அர்த்தமாகாது. அவளை நாம் தெய்வம் போல வீட்டில் ஓர் உன்னத ஸ்தானத்தில் குந்தவைத்து சகலமான காரியங்களுக்கும் வேலையாட்களை வைத்து, அவளை எப்போதும் சோம்பேறியாக வைத்துக் கொண்டிருப்பதற்காக நான் கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவள் கலெக்டருடைய பெண்ணாய் இருந்தாலும், டில்லி பாட்சாவின் பெண்ணாய் இருந்தாலும் சரி, அவள் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியவளே. என் வீட்டில் உள்ள பெற்றோர், பெரியோருக்கு அவள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். வீட்டில் உள்ள சகல பொறுப்புகளையும் காலக்கிரமத்தில் அவளே வகிக்க வேண்டும். எங்களுடைய தேகபோஷணை விஷயத்தில் அவள் எவ்வளவு உழைப்பாக இருந்தாலும் பின் வாங்கக் கூடாது. தான் என்ற அகம்பாவத்தையே அவள் விட்டு புருஷனுடைய குடும்பத் தாருடன் ஐக்கியப்பட்டு நடக்க வேண்டும். அப்படிப்பட்டவளே குடும்ப ஸ்திரீ என்பது என்னுடைய அபிப்பிராயம். நான் சமீபகாலத்தில் ஒரு விஷயம் கேள்வியுற்றேன். அது உனக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். ஒரு பெரிய உத்தியோகஸ்த