பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மாயாவிநோதப் பரதேசி


கோபாலசாமி:- நீ சொல்வது வேடிக்கையாகத் தான் இருக்கிறது. அது வெள்ளைக்காரரிடத்தில் மாத்திரந்தானா இருக்கிறது? நம்மவர்கள் பெண்ஜாதியை நாயகி என்றும், எஜமானி என்றும், தலைவி என்றும் குறிக்கிறார்களே. அந்தப் பதங்களை எல்லாம், நீ நம்முடைய அகராதியிலிருந்து எடுத்து விடுவாய் போலிருக்கிறதே.

கந்தசாமி:- என்னடா, அடேய்! என் வாயைக் கிளப்புகிறதற்காகவா, நீ இப்படிக் கிளறிவிடுகிறாய். பெண்கள் நாயகி என்ற பட்டங்களை எப்படி சம்பாதிக்கிறது? தான் புருஷனுக்குச் சமமான படிப்புடையவள், புத்தியுடையவள் என்ற அகம்பாவத்தினாலும் ஆணவத்தினாலும் அதை அடைய முடியுமா? அவளுடைய குணத்தழகினாலும், நடத்தை அழகினாலும், அவள் அப்படிப்பட்ட யோக்கியதையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். திராசு தட்டில், அதிக கனமுடைய தட்டு தாழ்ந்து நிற்கும், வெறுந்தட்டு உயர்ந்து நிற்கும். தண்ணீர் உள்ள குடம் சப்திக்காது. வெற்றுக் குடந்தான் ஓசை உண்டாக்கும். உண்மையான படிப்பும் ஞானமும் உள்ளவர் பணிவு, அடக்கம் முதலிய குணங்களுக்கே இருப்பிடமாய் தாம் என்பதை மறந்து ஒழுகுவார்கள். அவர்கள் எப்படிப்பட்ட தேகப் பிரயாசையையும் உழைப்பையும் ஓர் இழிவாகக் கருதமாட்டார்கள். இப்போது ஆண்பிள்ளைகளில் எத்தனையோ பேர் இதே வெள்ளைக்காரரிடம் உத்தியோகம் பார்க்கிறார்களே: உத்தியோக சாலைகளில் தலைமை அதிகாரிகளாக இருப்பவர்கள் சிலர் தற்குறிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய மார்பைப் பிளந்து பார்த்தால் கூட, படிப்பென்பது மருந்துக்கு ஒர் அக்ஷரம் கூட அகப்படாது. அவர்களுக்குக் கீழ் பீ.ஏ., எம்.ஏ., பட்டங்கள் பெற்ற மேதாவிகள் எத்தனையோ பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தலைவரிடம் அடிமைகளைப் போல நடந்து கொள்ளுவதை இழிவாக நினைக்கிறார்களா? அவர்களுக்குக் கிடைக்கும் ஸ்தானத்தில் அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படியே நடந்து கொள்ள வேண்டுமன்றி, தான் அதிகப் படிப்பாளி என்றும் புத்திசாலி என்றும் நினைத்து