பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

47

இப்படி அவர்களை விடுவதனால், எத்தனை புருஷர்கள் எத்தனை பெண்களை அழித்து மோசம் செய்துவிட்டு ஒடிப்போகிறார்கள். எத்தனை பெண்கள் கற்பழிந்து ரகசியத்தில் பிள்ளைப்பேறு, தற்கொலை முதலியவற்றைச் செய்து கொள்ளுகிறார்கள். ஆகா! அந்தத் துன்பம் சொல்லி முடியாது. இந்த விஷயத்தில் நம்மவர் செய்திருக்கும் ஏற்பாட்டுக்கு மிஞ்சியது ஒன்றுமில்லை. பகுத்தறி வில்லாத ஒரு பெண்ணை இளம்பருவத்தில் அதன் பெற்றோர் கலியானம் செய்து கொடுத்து விடுகிறார்கள். அந்தப் பெண் அதன் பிறகு இரண்டொரு வருஷ காலத்திற்குப் பிறகு புத்தியறிகிறது. அந்த மத்திய காலத்தில் அந்தப் பெண்ணின் மனசில் உண்டாகும். மாறுதலே நிரம்பவும் முக்கியமானது. புருஷன் விகார ரூபம் உடையவனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், துர்க்குணம் உடையவனாக இருந்தாலும், அந்தப் பெண் காலக்கிரமத்தில் அந்தக் குறைகளை மறந்து போகிறாள். அவள் தன் புருஷன், தன் புருஷன் என்று நினைத்து நினைத்து, ஒருவித பயபக்தியை வளர்த்து வருகிறாள். விசேஷ தினங்களுக்கு மாப்பிள்ளை வந்து போகுங் காலங்களில், பெற்றோரும் பெரியோரும் மாப்பிள்ளைக்குச் செய்யும் மரியாதைகளையும் காட்டும் அன்பையும் அந்தச் சிறுமி கண்டு கண்டு தானும் அவனிடம் அபாரமான வாஞ்சையையும் பக்தியையும் வைத்து வருவதால் அவை காலக் கிரமத்தில் பெருகி மனதில் நிலைத்துப் போகின்றன. அவர்கள் ஒன்று பட்டு இல்லறம் நடத்தத் தொடங்கும் காலத்தில், புருஷனிடம் உள்ள குற்றங் குறைபாடுகள் பெண்ணின் மனதில் உறைக்கிறதில்லை. அவள் அவனிடத்தில் உண்மையான பயபக்தி விசுவாசத்தோடு நடந்து கொள்ளுகிறாள். இப்படிப்பட்ட மன மாறுபாடு உண்டாவதற்கு, கலியாணத்திற்குப் பின்னும் சாந்தி முகூர்த்தத்துக்கு முன்னும் இரண்டொரு வருஷகால அவகாசம் இருப்பது இன்றியமையாத விஷயம். அந்தக் காலத்திற்குள் இருவரது குற்றங் குறைபாடுகளும் வெளிப்பட்டு, மனதில் உறைக்காமல் அற்றுப் போம். பிறகு வெறுப்பிற்கு இடமின்றி விருப்பே பெருகும். ஆரம்பத்திலேயே வயது வந்த இருவரையும் சேர்த்து விட்டால்,