பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மாயாவிநோதப் பரதேசி

தகப்பனாருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால், அவர்களுடைய மனசுக்கு வருத்தமாக இருக்கும். இதற்குள் எனக்கு இவ்வளவு பெரியத்தனமா என்று அவர்கள் நினைத்துக் கொள்ளுவார்கள். ஆகையால் இது ரகசியமாக இருக்க வேண்டும்” என்றான்.

கோபாலசாமி:- நீ எப்படிப் போகிறது? அவர்களுடைய மாப்பிள்ளை என்று சொல்லிக்கொண்டுதானே போக வேண்டும். போனால், கலெக்டர் உன்னோடு கூடவேதான் இருப்பார். அவர்கள் எவ்வளவுதான் ஐரோப்பியரைப் போல இருந்தாலும், எப்படியும் அந்தப் பெண் உன்னைக் கண்டு லஜ்ஜைப்பட்டு ஒரு பக்கமாக விலகித்தான் இருக்கும். நீ அதிகமாக நெருங்கிப் பழக முடியாதென்று நினைக்கிறேன். ஆனாலும் பாதகமில்லை. தூரத்தில் இருந்தாவது பெண்ணுக்கு எவ்வித ஊனமும் இல்லை என்பதையாவது நீ கண்டு கொள்ளலாம்.

கந்தசாமி:- என்னடா, கோபாலசாமி! மூடத்தனமாகப் பேசுகிறாய்! கலியாணம் செய்து கொள்ளப் போகிற நான் அவர் களுடைய பங்களாவுக்குத் தனிமையில் போய் அவர்களுடன் பேசுவதென்றால், அது அசம்பாவிதமாகவும் விகாரமாகவும் இருக்காதா. அவர்களுக்கு என்னைப்பற்றி கேவலமான அபிப்பிராயம் ஏற்பட்டு விடாதா! சேச்சே! அப்படிச் செய்யக் கூடாது.

கோபாலசாமி:- (வியப்பாக) சற்றுமுன் நீயே போய்ப் பார்ப்பதாகச் சொன்னாய்; இப்போது அது நன்றாய் இராதென்கிறாய். இதைத்தான் க்ஷணச்சித்தம் க்ஷணப் பித்தம் என்று சொல்லுவார்கள்.

கந்தசாமி:- அடேய்! ஏனடா இப்படி அவசரப்பட்டுப் பேசுகிறாய்? என்னுடைய கருத்தை நான் பூர்த்தியாக வெளியிடு கிறதற்குள் நீ ஆத்திரப்படுகிறாயே! என்னை இந்தக் கலெக்டர் எங்கள் ஊரில் பல தடவை பார்த்திருக்கிறார். நான் இப்போது நேரில் போனால் அவர் உடனே அடையாளங் கண்டு கொள்வார்.

கோபாலசாமி:- அப்படியானால், அவர் தம்முடைய கச்சேரிக்குப் போயிருக்கிற சமயத்தில் போக நினைக்கிறாயா? அப்போது பெண் தனியாகத்தான் இருக்கும். ஆனால் அதில் பல