பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மாயா விநோதப் பரதேசி

எல்லா விவரமும் பத்திரிகையில் குறிக்கப்பட்டிருக்கிறது" - என்றான்.

வேலாயுதம் பிள்ளை, "பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதைப் படி" என்றார். உடனே கண்ணப்பா அதைப் படிக்கலானான். விவரம் அடியில் வருமாறு:

ஒரு பிரபலக் கைதி ஜெயிலிலிருந்து
தப்புவிக்கப்படுகிறார்.

மன்னார் கோவிலில் உள்ள துப்பறியும் நிபுணரும், பரோபா காரியுமான திகம்பர சாமியார் என்பவரால் சுமார் இரண்டு வருஷ காலத்துக்கு மூன் ஒரு விநோதமான வழக்கு கொண்டுவரப் பட்டதும், அதன் முடிவில் கும்பகோணத்தில் இருந்த பிரபல வக்கீலான சட்டைநாத பிள்ளையும், வேறு சிலரும் கடுமையான தண்டனை அடைந்ததும், பொது ஜனங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கலாம். அப்போது சட்டைநாத பிள்ளை பத்து வருஷத்திற்கும், சப்ஜட்ஜி சர்வோத்தம சர்மா, நமசிவாய பிள்ளை, அஞ்சலையம்மாள் ஆகிய மூவரும் இரண்டிரண்டு வருஷத்திற்கும், முதல் குற்றவாளியின் தம்பி மாசிலாமணி என்பவர் ஒரு வருஷ காலத்திற்கும் கடினக்காவல் தண்டனை அடைந்தார்கள் அல்லவா. அவர்களுள் மாசிலாமணி என்பவர் சிறையில் ஒரு வருஷ காலம் இருந்து கழித்துவிட்டு வெளியில் வந்து பதினோரு மாத காலமாகிறது. மற்ற மூவர்கள் வெளியில் வர இன்னம் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே செல்ல வேண்டும். ஆனால் சட்டைநாத பிள்ளை இன்னம் எட்டுவருஷ காலம் சிறையில் இருக்க வேண்டியவர். சிறையில் இருந்து வெளிப்பட்டு வந்த மாசிலாமணி என்பவர் தமது அபார சொத்துக்களை எல்லாம் ஒப்புக் கொண்டு கும்பகோணத்தில் தமது ஜாகையில் இருந்து வருகிறார். அவர்களுக்கு நேர்ந்த அவமானத்தைக் கருதி அவர் அதிகமாக வெளியில் வராமல் எப்போதும் வீட்டிற்குள்ளாகவே இருந்து வருகிறதாகத் தெரிகிறது. இந்தக் குற்றவாளிகள் எல்லோரும் தஞ்சாவூர் பெரிய ஜெயிலில் இருந்து வந்தார்கள். அந்த ஜெயிலிற் குற்றவாளிகளைக் கொண்டு செக்கில் நல்ல