பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

சுத்தமான நல்லெண்ணெய் தயாரித்து ஊரில் உள்ள ஜனங்களுக்கு விற்பது வழக்கம். ஒரு குடத்தில் எண்ணையை நிரப்பி வைத்து ஒரு குற்றவாளி அதைத் தனது தலையில் சுமந்து கொண்டு வருவான். அவனோடு பாதுகாப்பாக இரண்டு சேவகர்கள் (வார்டர்கள்) இரண்டு பக்கத்திலும் வந்து, வீட்டுத் திண்ணைகளில் கூடையை இறக்கச் செய்து வீட்டாருக்கு எண்ணெய் விற்றுக்கொண்டே போவார்கள். அப்படி வரும் கைதியின் இரண்டு கால்களிலும் இரும்பு விலங்குகள் போட்டு, அழுத்தமான சங்கிலியால் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கும். அந்தச் சங்கிலியின் நடுவில் ஒரு கயிற்றைக் கட்டி சங்கிலி கீழே இழபடாமல் மேலே தூக்கி இடுப்பில் கட்டிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சங்கிலியோடு கைதி சாதாரணமாக நடக்க முடியுமேயன்றி - ஓடமுடியாது. அவ்வாறு எண்ணெய்க் குடத்தைத் தூக்கிக் கொண்டு வெளியில் வருவதற்கு, துஷ்டத்தனமும் மூர்க்கத்தனமும் இல்லாத சாதுக்களாகவும் திடகாத்திரம் உள்ளவராகவும் பார்த்து நியமிப்பது வழக்கம். சிறைச்சாலைக்குப் போனவுடன் சட்டைநாத பிள்ளை அங்குள்ளோரிடம் நிரம்பவும் பணிவாக நடந்து, செக்கில் உட்கார்ந்து, மாடுகளை ஓட்டும் வேலையைச் செய்து வந்தாராம். இதுவரையில் வேறே ஒருவன் வழக்கமாக எண்ணெய்க்குடம் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தானாம். அவன் விடுதலை அடைந்து அவ்விடத்தை விட்டுப்போய் இரண்டு மாதகாலம் ஆகிறதாம். அதன் பிறகு தாம் குடத்தை எடுத்துக் கொண்டு வருவதாக சட்டைநாத பிள்ளை கேட்டுக் கொண்டதன்மேல் இந்த இரண்டு மாத காலமாக அவரை அந்த வேலைக்கு உபயோகப் படுத்தி வந்தார்களாம். அவர் பரம சாதுவாகவும் தேகவலுவோடும் அந்த வேலையைச் செய்து வந்தாராம். இன்றைய தினம் காலையில், அவர் எண்ணெய்க் குடத்தைத் தூக்கிக்கொண்டு இரண்டு வார்டர்கள் சமேதராக தஞ்சை மேற்கு ராஜவீதியின் வழியாக வந்தபோது, ஓர் ஆள்வந்து, பக்கத்தில் இருந்த ஒரு சந்திற்குள் ஓர் அம்மாளுக்கு எண்ணெய் வேண்டும் என்று அழைத்தானாம். வார்டர்கள் அதை நம்பி கைதியோடு அங்கே போனார்களாம். சந்திற்குள் ஒரு மெத்தை வீட்டின் நடையில்