பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மாயா விநோதப் பரதேசி

உடனே கண்ணப்பா, "எல்லாம் அந்த மாசிலாமணி செய்த காரியம் என்பதற்குச் சந்தேகமே இல்லை. சட்டைநாத பிள்ளையின் இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாதென்ற அகம்பாவத்தினால் அவன் சர்க்காருக்குப் போட்டியாக அவர்களுடைய தொகையைவிட, இரட்டிப்புத் தொகை வெகுமதி கொடுப்பதாக வெளியிட உத்தேசிக்கிறான் போலிருக்கிறது. நம்முடைய சுவாமியார் இந்த விஷயத்தைக் கேட்டு நிரம்பவும் கவலை கொண்டிருக்கிறார். அவர்கள் நமது பேரிலும் சுவாமியார் பேரிலும் அடங்காத ஆத்திரமும் பகைமையும் வைத்து, பலவகையில் தீங்கிழைக்க முயலுவார்கள். ஆகையால், நாம் எல்லோரும் ஜாக்கிரதையாயும் பாதுகாப் பாகவும் இருக்க வேண்டும் என்று சுவாமியார் உங்களிடம் சொல்லச் சொன்னார். அவரும் இன்று மத்தியானம் இங்கே வருவதாகச் சொன்னார்" என்றான்.

3-வது அதிகாரம்
போலீஸ்புலி- நொண்டிதுரை-இடும்பன்
சேர்வைகாரன்

க்கீல் சட்டைநாத பிள்ளை தண்டனை அடைந்து சிறைச் சாலைக்குச் சென்ற காலத்தில் அவருக்கு ஏராளமான சொத்துகள் இருந்தன. கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ள திருநாகேசு வரம் என்ற ஊரில் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ளதும், மூன்று போகம் விளைவுள்ளதுமான நன்செய் நிலம் இருந்தது. அதை அவர் குத்தகைக்கு விட்டிருந்தார். அது நிற்க, அவர் ரொக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் சில பெரிய ஜெமீந்தார்களிடம் வட்டிக்குக் கொடுத்திருந்தார். கும்பகோணத்தில் அவர் வசித்து வந்த பெரிய மாளிகையைத் தவிர, இன்னும் மூன்று மச்சு வீடுகள் இருந்தன.

இவைகள் நிற்க, அவரது கைவசத்தில் நகைகளாகவும், தட்டுமுட்டு சாமான்களாகவும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமானம் உடைய பொருட்கள் அவரது சொந்த மாளிகையில்